குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]
பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.
காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.
காம்பு - பூ, இலைமுதலியவற்றின்தாள்; மலர்க்கொம்பு; கருவிகளின்கைப்பிடி; மூங்கில்; ஆடைக்கரை; ஒருவகைப்பட்டாடை; பூசணி; அம்புச்சிறகு.
ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.
தோள் - புயம்; கை; தொளை.
பேதைக்குப் - பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை

நீர்மை - nīrmai n. நீர்¹. 1. Property ofwater, as coolness; நீரின்றன்மை. (குறள், 195,உரை.) 2. Nature, property, inherent quality;தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள்,17). 3. Goodness, essential excellence; சிறந்தகுணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள்,195). 4. Affability; சௌலப்பியம் ஆவாவென்றநீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ(திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக்.44). 5. Beauty; அழகு மெய்ந்நீர்மை தோற்றாயே(திவ். திருவாய். 2, 1, 6). 6. Brilliance, lustre;ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 7. State,condition; நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ்.திருவாய். 1, 4, 4). 8. Observance of properrules or established custom; ஒப்புரவு (W.)
பெரிது - peritu id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).
முழுப்பொருள்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).
மணக்குடவர் உரை
காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.
மு.வரதராசனார் உரை
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

என்னுடைய கண்கள் நிறைந்த இந்த காரிகை(பெண்) மூங்கிலைப் போல வளைந்த அழகியத் தோள்களை கொண்டு உள்ளாள். இவள் பெண்களுக்கே உரித்தான குணங்களை மிகுதியாகவே பெற்று இருப்பது இவளுக்கும் இன்னும் அழகு சேர்க்கிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).
மணக்குடவர் உரை
காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.
மு.வரதராசனார் உரை
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.
No comments:
Post a Comment