செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை
குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று
[காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்]
பொருள்
நிறை - நிறை
பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
நிறையழிதல் - மனவடக்கம் அழிதல்
செற்றார் - ceṟṟār n. id. Enemies; பகைவர். செற்றார் செயக்கிடந்த தில் (குறள், 446).நிறை - நிறை
பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
நிறையழிதல் - மனவடக்கம் அழிதல்
பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.
செல்லாப் - செல்லாத
பெருந்தகைமை - பெரும் தன்மை; பெரும் பொறுமை; பெரும அழகு
காமநோய் - s. Love-sickness, மதன நோய்.
அறிவது -அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
அன்று - aṉṟu அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).
பொதுவாக நம்மை இகழ்ந்தவர்பின், நம்மைவிட்டு வலிய பிரிந்து சென்றவர்பின் நாம் செல்ல மாட்டோம். ஏனெனில் அது தன்மானம் அற்ற செயல் என்று நினைப்போம். அப்படிச் செல்வது சான்றான்மை அல்ல என்று நினைப்போம்.
ஆனால் நம்மை இகழ்ந்து விட்டுச்சென்ற நம்மை பிரிந்துச் சென்ற நம் பிரியத்திற்கூரிய காதலர் பின் செல்லக்கூடாது என்றும் அல்லது குறைந்தபட்சம் விரைந்துச்செல்லாமல் அவர் நம்மை நோக்கிவர முதல் அடி எடுத்துவைக்கும் வரையிலாவது பொறுத்து இருக்க வேண்டும் என்று நம்முடைய தீரா காதல்/காம நோய்க்கு அறிந்து இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் காமம் நம்மை சுட்டு விடும். இயற்கையான காமத்திற்கு மனவடக்கம் கிடையாது. அதற்கு காதலரிடம் கொண்ட அன்பு மட்டுமே முக்கியம். காதலர்முன் மனவடக்கம் தேவை இல்லை.
இது இருபாலினருக்கும் பொருந்தும் குறள்.
இது இருபாலினருக்கும் பொருந்தும் குறள்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.).
மணக்குடவர் உரை
தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.
சாலமன் பாப்பையா உரை
தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.
விட்டு விட்டுச் சென்று விட்டார் காதலரும்
வெறுத்திடவா முடிகிறது இல்லை இல்லை
தொட்டவரின் பின்னாலே செல்வதொன்றே
துடியிடையாள் எனை இங்கு வாழ வைக்கும்
விட்டவரை விலகி இங்கு மானத்தோடே
வெற்றி கொள்ள முடியாது காமம் நம்மை
சுட்டு விடும் அதனாலே மானம் கொள்ளல்
சுத்தமாய்ப் பெண்களுக்கு வேண்டாம் என்றாள்
Comments
Post a Comment