குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]
பொருள்
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடு
நயந்தவர் - விருப்பத்திற்குரியவர்; ஆசைக்குரியவர்
நயந்தவர்க்கு -
நல்கு - nalku III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி.
ஆமை - ஒரு நோய்
நல்காமை - (என் மீது) ஆசை நோய்
நேர்தல் - பொருந்துதல்; நிரம்புதல்; நிகழ்தல்; எதிர்ப்படுதல்; இளைத்துப்போதல்; மென்மையாதல்; எதிர்தல்; நெருங்குதல்; தீண்டுதல்; பெறுதல்; கொடுத்தல்; உடன்படுதல்; ஒத்தல்; உறுதிசெய்தல்; அமர்த்தல்; நியமித்தல்; தண்டனைக்குஉட்படுத்தல்; வேண்டுதல்; செல்லுதல்; வேண்டிக்கொள்ளல்; எதிர்த்தல்; அறுத்தல்.
நேர்ந்தேன் - உடன்பட்டேன்
பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.
பசந்த - பசந்து - pacantu n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.
என் - என்னுடைய
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
யார்க்கு - யாரிடம் சென்று
உரைக்கோ- சொல்லுவேன்
பிற - மற்றவர்கள்
முழுப்பொருள்
நான் ஆசையாய் காதலித்த என்னை ஆசையாய் காதலித்த என் காதலருக்கு அவர் கேட்ட பிரிவுக்கு உடன்பட்டேன். ஐயோ! நான் அப்போது உடன்பட்டேன் தவிர இப்படி ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. இவர் பிரிவால் நான் இப்பொது கொண்ட பசலை நிறத்தை (பசலை நோய்) யாரிடம் போய் சொல்வேன்?
பி.கு: அப்படியே சொன்னாலும் பயனுண்டோ? இல்லை. பிரிவுக்கு என் காதலரே மருந்து. ஆதலால் யாரிடம் சொன்னாலும் அவர்களின் ஆறுதல் என்னை சமாதானமும் செய்யாது.
ஒப்புமை
”பயப்பன் மேனி யதுவே; நயப்பவர்
நார்இல் நெஞ்சத்து ஆரிடை யதுவே” (குறுந்.219:1-2)
“பயப்புறு படரட வருந்திய
நயப்பின் காதலி நகைமுகம் பெறவே” (அகநா. 344:12-3)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அது, பசப்புற்ற பருவரல் என விரியும்.அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது .]
(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.).
மணக்குடவர் உரை
காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
மு.வரதராசனார் உரை
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.
சாலமன் பாப்பையா உரை
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?.
No comments:
Post a Comment