குறள் 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
பொருள்
செய்வினை - வினை முதல் வினை; முற் பிறப்பில் செய்த கருமம்; பில்லி சூனியம்; செய்யுந் தொழில்; cey-viṉai n. id. +. 1. Work,undertaking; செய்யுந் தொழில் செய்வினை தூய்மை(குறள், 455). 2. Karma; முற்பிறப்பிற் செய்த கருமம் சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 3. (Gram.) Verbin active voice; வினைமுதல்வினை. (இலக். கொத்.67.) 4. Witchcraft, sorcery; பில்லிசூனியம் Colloq.
செய்வான் - செய் வான்
செயல்முறை - ஒரு செயலை செய்ய வேண்டிய ஒழுங்கு
அவ் வினை - அச்செயலை
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை
அறிவான் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.
முழுப்பொருள்
ஒரு செயலை செய்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. தனக்கான செயலாக இருந்தால் அது நமது நேரம், ஆற்றல், உழைப்பு என்று பல்வேறு தளங்களில் முக்கியமானது. அதேப் போல பலர் ஈடுபட்டு இருந்தால் அதில் பலருடைய நேரம், ஆற்றல், உழைப்பு அடங்கி உள்ளது. அதனை நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் பிற்காலத்தில் அவர்களும் (இதனை பார்த்த) மற்றவர்களும் நமக்கு உதவ மாட்டார்கள்.
ஆகவே ஒரு செயலை செய்யும் முன் அதனை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனுடைய நன்மை, தீமை, பயன், தேவையான வளங்கள், பொருள்கள், உழைப்பு, மக்கள், அறிவு, திறன், தொழில்நுட்பம் என்று பலவகையான கோணங்களில் அச்செயலை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதேப்போல ஒரு செயலை எப்படிச்செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதற்கென்று ஒரு ஒழுங்கு, முறை, பக்குவம், வரிசை என்று இருக்கும். அதனை அறிந்து இருக்க வேண்டும். இதற்கு எல்லாம் ஏது துணையாக இருக்கும் என்றால் அச்செயலை முன்னரே செய்த செயல்வீரர்களிடம் பேசுவதே ஆகும். அப்படி அவர்களிடம் பேசி அவர்களின் அறிவை , அனுபவத்தை பாடமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே விவேகம் ஆகும்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆக அவரவர்
தந்நீர ராதல் தலை” (பழமொழி 395)
பரிமேலழகர் உரை
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.) .
மணக்குடவர் உரை
செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.
மு.வரதராசனார் உரை
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
Thirukkural - Management - Leadership
Leaders may have shortcomings. A leader need not know everything he is expected to know. Every leader has to seek counsel from people who are experts in their respective fields. Kural 677 instructs us that a leader, before executing an action, must get suggestions, directions, and guidance from other people who have thorough knowledge and experience related to that particular action. In modern management that practice is called seeking expert advice.
The way to do a thing is to get
Inside an insider.
The thought presented in Kural 677 is related to mentoring. Every leader needs a mentor who can mentor his leadership skill. Studies of successful leaders prove that acclaimed leaders have benefitted from the guidance from their mentors. The practice of mentoring has been in all fields, viz., religion, politics, education, and business. Refer to the Practice on ‘Mentoring' to learn more.
No comments:
Post a Comment