Skip to main content

Posts

Showing posts from June, 2015

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்

குறள் 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற  படல்ஒல்லா பேதைக்கென் கண் [காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்] பொருள் மடல்  -  ஊர்தல் - மடலூர்-தல் - தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல் யாமம் - நள்ளிரவு; சாமம்; இரவு; இடக்கைமேளம் யாமத்தும்  - இரவிலும். அதாவது பகல் மட்டும் அல்லாது இரவிலும் உள்ளுதல் -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உள்ளுவேன்   - மனதில் நினைத்துக்கொண்டிருப்பேன் உள் - உள்ளே - மனதில் உள்ளு -  உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளல், உள்கல், உள்குதல் உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.  மன்ற - ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக. s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி படல்  - ஓர்அடைப்புவகை; மறைப்புத்தட்டி; பூந்தடுக்கு; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக் கட்டையிலுள்ள குழி; உறக்கம் ஒல்லா ...