குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் [பொருட்பால், அரசியல், பொச்சாவாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொச்சா - பொச்சாப்பு - மறத்தல் - மறதி பொச்சாவாமை - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை உள்ளி - மனதில் நினைத்து உள் - உள்ளே - மனதில் இ - demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations. உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய் - எறி (cast, throw) எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது. மன் - part. 1. An expletive; ஓ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.