Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

குறள் 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
வேண்டாரை வேண்டாது உலகு.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்.

திட்பம் - சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு, வலிமை (Solidity)
திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம்  (நன். 18). 
உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திருநாட். 97). 

எனைத்திட்பம் - படை, அரண், நட்பு முதலிய திட்பங்கள், வலிமைகள்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

எய்தியக் கண்ணும் - எல்லாம் உடையவராக இருந்தாலும்

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினைத்திட்பம் - செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறுதி 

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாரை - இல்லாதவரை (அக்கரை இல்லாதவரை)

வேண்டாது உலகு - இவ்வுலகம் அதாவது சான்றோர்கள் (உயர்ந்தோர்கள்) மதிக்க மாட்டார்கள் / அவர்கள் விரும்பிப் போற்றமாட்டர்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
1. எல்லா திட்பங்களும் அதாவது படை, அரண், நட்பு ஆகிய வலிமைகள் சேர்க்ககூடிய திட்பங்கள் இருந்தும் ஒருவருக்கு (அமைச்சருக்கு) தான் செய்யும் செயலில் மன உறுதி (செயல் உறுதி) என்கிற வலிமை / திட்பம் இல்லை என்றால் அவரை உயர்ந்தோர் (சான்றோர்) மதிக்கமாட்டார்கள் / விரும்பி போற்றமாட்டார்.

2. எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.


இதனை மகாகவி பாரதியார் கிளியிடம் இப்படி சொல்லிகிறார்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி. 
.................
.................
.................
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
செய்வ தறியா ரடீ! 
.................
.................
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
வாழத் தகுதி யுண்டோ ? 
.................
.................
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
மனத்தி லதனைக் கொள்ளார் 
.................
.................

என் வாழ்வில் உதாரணம்:
என்னோட வாழ்க்கைல பல மைல்கல்களை நான் இப்படித் தான் கடந்து இருக்கிறேன். 

நான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு சிறு வயதில் இருந்தே உண்டு. நேத்து எங்க உறவு கார்த்திக்கேயன் அங்கில் பொன்னு கல்யானத்துக்கு சென்று இருந்தேன். (சுத்தி வலைத்த உறவு ஆதலால் அங்கில் என்று பொதுவாக சொல்கிறேன்). அங்கில்  மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மாதிரி நம்மலும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற உந்துதலை நான் உருவாக்கிக் கொள்ள காரணம் அவர் தான். 

காலப்போக்கில் பொறுப்புகள், தடைகள் எல்லாம் என்னை அந்தப் பாதையில் இருந்து விலக்கியது. நான் டாடா ஏலக்சியில் (Tata Elxsi) இருந்து வெளியே வரும் போதுக் கூட மேலே எம்.பி.ஏ படிப்பேன் பின்பு என்றேன். என் வீட்டுக்கு பிறகு என்னை எப்போதும் மேலே படி என்று சொல்பவர் இரண்டு பேர் ஒன்று சுந்தரேசன் அம்மா மற்றும் என் நண்பர்கள். 

ஒரு தடவை (2009 இல்) மதிப்பெண் குறைவாக வந்தது, பின்பு (2013’இல்) நேர்காணலில் தேர்ச்சி பெறாதது, பின்பு (2014’லும்) சில நேர்காணகளில் தேர்ச்சிப் பெறவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் எனது மேலாளர் ராஜாஜி, சுந்தரேசன் & அம்மா, நண்பர்கள் எனக்கு மிகுந்த உதவி புரிந்து இருக்கிறார்கள். நான் இந்த தோல்விகளை சந்திக்கும் போது எல்லாம், எனக்கு பல எண்ணங்கள் தோன்றும். இது மிக கடினமாக உள்ளது. மிகுந்த நீளமாக சென்றுக் கொண்டு இருக்கிறது. நமக்கு கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்ற கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அப்படி நடந்தால் நாம் என்ன செய்வது என்ற சிந்தனைகள் புகுந்துக்கொண்டே இருக்கும். பேசாமல் நாம் எம்.எஸ் படிக்க முயற்சி செய்யலாம் அல்லவா என்று தோன்றும் பல நாட்கள். நான் சொல்லிக்கொண்டது ஒன்று தான், எடுத்த காரியத்தில் பின்வாங்கினால் இவர்கள் என்ன சொல்வார்கள் நம்மைப் பற்றி. நமக்கு மன உறுதி இல்லை என்றே சொல்வார்கள் ? இப்பயணத்தின் கடைசி நாட்களில் இந்த பழிச் சொல்லுக்கு அஞ்சியே நான் உறுதியோடு செயல்பட்டேன். இப்பொழுது எம்.பி.ஏ-க்கு அனுமதி பெற்றேன் (இரண்டு நாள் முன்பு 08-Feb-2014). 

இந்த குறளை நான் இன்று தான் முதல் முறை வாசிக்கிறேன். ஆனால் எனது மன ஓட்டத்துடன் எவ்வளவு ஒன்றிப் போய் உள்ளது என்று எண்ணுகையில் நன்றாக உள்ளது. 

பரிமேலழகர் உரை
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். 
விளக்கம் 
[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.] 

மணக்குடவர் உரை
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது 

மு.வரதராசனார் உரை
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது

சாலமன் பாப்பையா உரை
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார் / விரும்பிப் போற்றமாட்டார்.

Thirukkural - Management - Commitment
Most of the management thinkers, entrepreneurs, consultants, and leaders frequently refer to ’commitment’ as a quality expected in and from their employees. Every leader works to create a committed workforce. Many workshops,  seminars,  and conferences are conducted to increase commitment of employees towards their tasks and their organizations. The often used or preferred word in today's organizations is commitment.  “Commitment,” according to Oxford Advanced Learner's Dictionary, “is  the state of being willing to give a lot of time, work, energy, etc to something.”

Valluvar's advice on commitment in Kural 670 is more relevant in today's context. A person may possess the required knowledge, skills, and qualities to execute a task. But he may not have the commitment required to perform the task. 

The world has no use for those however strong
who have no use for firmness.

If a person does not have the commitment to execute the task, the committed people, society, and the world at large will not accept his services. Therefore, commitment to accomplish a task is more important  than knowledge, skills, and other superior qualities. Be committed to the task, your position and your organization.

No comments:

Post a Comment