Skip to main content

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல

குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
அகழ் - akaẕ   அகழு, II. v. t. dig out, excavate. தோண்டு.
அகழு - akẕu  -அகழ், கிறேன், அகழ்ந்தேன், வேன், அகழ, v. a. To dig out, excavate a well or ditch, form a hole as a rat, &c., தோண்ட. 2. To dig, turn up the earth, plough, உழ. (p.) 

அகழ்வாரைத் - அகழ்வார் - தோண்டுவோர் 

தாங்கும் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

போல - ஓர்உவமவுருபு

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு

இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு
இகழ்தல் - ikaḻ   n. இகழ்-. Contempt,reproach; இகழ்ச்சி இகழறு சீற்றத் துப்பின் (காஞ்சிப்பு. கச்சி 21).  

இகழ்வார்ப் - அவமதிப்போர், வெறுப்போர்

பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
இவ்வுலகில் நிலத்தை தன்னலத்திற்கான கட்டுமானம், பொதுநலனிற்கான கட்டுமானம், அகழ்வாராய்ச்சிப் போன்ற பலகாரணங்களுக்காக தோண்டுவார்கள். பெரும்பாலும் இவை அனைத்தும் சுயநலத்திற்கே. பல பயிர்களை விளைவிக்க ஏர் உழுதாலும் அது சுயநலத்திற்காகவே. நிலத்தை தோண்டும் பொழுது நிலம் ஒரு பொழுதும் அதற்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. தோண்டும் பொழுது விழுந்தால் கூட எவ்வித காழ்ப்பும் இன்றி மனிதனை தாங்கிப்பிடிக்கும் நிலம். அதனால் தான் நிலத்தை பொறுத்தலுக்கும் / பொறையுடைமைக்கு எடுத்துக்காட்டாக கூறுகிறார் திருவள்ளுவர்.

ஆதலால் தன்னையே தோண்டும்  மனிதனைக் கூட  கீழே  விழுந்து விடாமல் தாங்கும் நிலம் போல, பழிப்பவர்களையும், தூற்றுபவர்களையும், அவமதிப்போரையும் கூட பொறுத்து கொள்வது தலையாய பண்பாகும் .

ஒப்புமை
”நோன்மை நாடின் இருநிலம்” (பரி 2:55)
“நிலத்தோ ரன்ன நலத்தகு பெரும்பொறை” (பெருங் 1.42:179)

குறள் 579

“பொறைஎனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி.133:14)
“தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றி” (நாலடி 58)
“கறுத்தாற்றித் தம்மைப் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால்’ (பழ 19)

மேலும்





பரிமேலழகர் உரை:
[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

மணக்குடவர் உரை
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

மு.வரதராசனார் உரை
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அமைதியாயிரு. பொறுமையே பெரிது.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (மண்வெட்டி கொண்டு தன்னைத்) தோண்டுவாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

அகலம்: இகழ்வார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா- லும்மை, யயரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்’ - நாலடியார்.

கருத்து: தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.


Thirukkural - Management - Tolerance
“Tolerate” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 1258), “is to allow  something that one does not like or agree to happen or continue.” This practice has included four Kurals to deliberate on the importance of tolerance for a balanced and stress free life.

Valluvar uses a simile to teach us the purpose of tolerance in our life. Earth tolerates the people who dig and till it for their personal gains. The earth, besides tolerating them, gives them back in the form of abundant yields. Earth never shows revenge towards people who trouble it. Tolerance  is the quality of earth, elaborates Kural 151.

To bear insults is best, like the earth 
Which bears and maintains its diggers.

Similar to earth, a tolerant person must be able to tolerate people who abuse, criticize, insult, and hurt him. In addition to tolerating the abuses, criticisms, insults, and hurts, he has to do good things in turn to exhibit the quality of tolerance in him.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...