குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]
பொருள்
ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
எழு - eẕu s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்
செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.
சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
வரு - வரும்
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
வைத்து - vaittu part. வை³-. Anexpletive; ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டுவைத்தும் (சீவக. 681, உரை).
வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.
ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.
ஏங்கு பவர்க்கு - ஏங்குபவர் - மனம் வாடுபவர்க்கு; கவலைப்படுவர்க்கு
முழுப்பொருள்
தொலை தூரம் சென்ற காதலரை எதிர் நோக்கி, எப்பொழுது திரும்புவார் என்றும் அவர் வரும் நாளை மனதில் வைத்து அவரையே அவருடன் கூடி இருந்த நாட்களை மனதில் நினைத்து ஏங்கி வாடும் காதலிக்கு ஒரு நாள் கூட பல நாட்களாக தோன்றும்.
கவிஞர் வாலியின் வரிகளில் இதை ஒற்றிய சினிமா பாடல் ஒன்றின் சில வரிகள் கீழே .
"நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே"
ஒப்புமை
”எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” (குறுந் 24:4)
“ஏழூர்ப் பொதுவினைக் கோரூர்” (குறுந் 172:5)
“ஒருநாள் நம்மில் வந்ததற் கெழுநாள்
அழுப என்ப” (ஐங்குறு.32)
“ஒவா தெழுமடங் குட்குவரத் தோன்றி” (பெருங்.1.43:122)
“பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி” (சீவக.116)
“தெய்வங்காள் என்செய்கேன் ஓரிரவே ழூழியாய்” (திருவாய் 5.4:8)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
மணக்குடவர் உரை
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.
மு.வரதராசனார் உரை
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
சாலமன் பாப்பையா உரை
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.
No comments:
Post a Comment