குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஒழுக்கத்து - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே வழுவாது நின்று
நீத்தார் - முனிவர்; துறவியர்; உலக ஆசைகளைத் துறந்தவர், இறை சிந்தனையும், சுய உணர்தலையும் நாடும் தவத்தோர்
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.
விழுப்பத்து - விழுப்பம் - viḻuppam n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23); viẕuppam s. desire, wish, விருப்பம்; 2. good, benefit, நன்மை; 3. excellence, மேன்மை; 4. a tribe, குலம்.
வேண்டும் - வேண்டும்; தேவையானது
பனுவல் - paṉuval n. பன்னு-. 1. Tousedcotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; பஞ்சிநூல். (சூடா.) 3. Word; discourse; சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96). 4. Stanza,musical composition; பாட்டு. வரிநவில் பனுவல்(புறநா. 135). 5. Treatise on scientific subjects;நூல். பனுவற்றுணிவு (குறள். 21). 6. Learningthrough oral instruction; கேள்வி. செவிமுதல் வித்திய பனுவல் (புறநா. 237). 7. Research;ஆராய்ச்சி. பனுவ னுண்ணூ னடையுளார் (சீவக.464). 8. Learning; கல்வி. (பிங்.)
பனுவல் - paṉuval s. cotton, பஞ்சிநூல்; 2. word, discourse, மொழி; 3. the Agamas; 4. science, literature, நூல்.
பனுவலாட்டி - Saraswati, as the goddess of science.
துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.
முழுப்பொருள்
தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று, தத்தம் தனக்கு உரிய ஒழக்கங்களையும் அறங்களையும் வழுவாது ஒருவன் வாழ்ந்தால் அறம் வளரும். அறம் வளர அறியாமை நீங்கும். அறியாமை நீங்கினால் இம்மை (இப்பிறவி) மறுமை (மறு பிறவி) இன்பங்களின் உவர்ப்பும் (துவர்ப்பு, வெறுப்பு) தோன்றும்.
அவ்வாறு தோன்றினால் அறம், பொருள், இன்பம் வரிசையில் வீட்டின் கண் ஆசை உண்டாகும். அஃது உண்டாக (மறு)பிறவிக்குக் காரணமாகிய பயன் இல்லாத செயல்களையெல்லாம் விட்டு விட்டு (துறந்து), வீட்டிற்கு காரணமாகிய யோகமுயற்சியில் ஈடுபடுத்திக்கொள்வர்.
அஃது உண்டானால், மெய்யுணர்வு பிறக்கும். புறப்பற்று எனப்படும் ‘எனது’ மற்றும் அகப்பற்று எனப்படும் ’யான்’ தன்னை விடும். ஆகவே இவ்விரு பற்றையும் உவர்த்து விடுதல் வேண்டும்.
இப்படி தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்து, மேன்மக்கள் வீட்டினை அடைவர். அவர்களது பெருமையை நூல்கள் (பனுவல்) பாடும்.
மேலும்: அஷோக் உரை
தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று, தத்தம் தனக்கு உரிய ஒழக்கங்களையும் அறங்களையும் வழுவாது ஒருவன் வாழ்ந்தால் அறம் வளரும். அறம் வளர அறியாமை நீங்கும். அறியாமை நீங்கினால் இம்மை (இப்பிறவி) மறுமை (மறு பிறவி) இன்பங்களின் உவர்ப்பும் (துவர்ப்பு, வெறுப்பு) தோன்றும்.
அவ்வாறு தோன்றினால் அறம், பொருள், இன்பம் வரிசையில் வீட்டின் கண் ஆசை உண்டாகும். அஃது உண்டாக (மறு)பிறவிக்குக் காரணமாகிய பயன் இல்லாத செயல்களையெல்லாம் விட்டு விட்டு (துறந்து), வீட்டிற்கு காரணமாகிய யோகமுயற்சியில் ஈடுபடுத்திக்கொள்வர்.
அஃது உண்டானால், மெய்யுணர்வு பிறக்கும். புறப்பற்று எனப்படும் ‘எனது’ மற்றும் அகப்பற்று எனப்படும் ’யான்’ தன்னை விடும். ஆகவே இவ்விரு பற்றையும் உவர்த்து விடுதல் வேண்டும்.
இப்படி தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்து, மேன்மக்கள் வீட்டினை அடைவர். அவர்களது பெருமையை நூல்கள் (பனுவல்) பாடும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது.]
ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.
மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
சாலமன் பாப்பையா உரை
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
துறவியரைப் போற்றுவதே அறநூலுக்கு அழகு.
English Meaning - As I taught a kid - Rajesh
When one leads a disciplined life and performs his/her dharma/duties, he/she would gain his/her success, prosperity and happiness. He/She will remove ignorance/darkness from his/her life. He/She will ignore the desires because he/she has realized that performing dharma alone would give true happiness. Such a person would attain growth and can attain moksha/success. The literature/world would sing praises of such people. Generally, it refers to sages. But in current world, it can refer to everyone who has contributed to uplift their family, community, nation, and world.
Questions that I ask to the kid
Of our ancestors who's praises will be sung by books?
No comments:
Post a Comment