வள்ளுவமும் சமணமும் / வள்ளுவமும் ஜைனமும் - Jainism and Valluvar / Thiruvalluvar / Tiruvalluvar - Tirukkural / Thirukkural

Exploring Thiruvalluvar’s Jain connections, Thirukkural roots, and ancient Jain temples like Aadheeswara Swamy & Acharya Kunda Kunda in Tamil Nadu.

தமிழ் விக்கியில் இருந்து - வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது. வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819- ஆம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்ஸிஸ் வயிட் எல்லீஸ் Francis Whyte Ellis 1777-1819) குறிப்பிடுகிறார். வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் கமில் வாச்லவ் சுவெலபில், கடவுளுக்கு திருவள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார். திருவள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்ற "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவே" இருந்திருக்கக்கூடும் என்பது கமில் வாச்லவ் சுவெலபில்லின் கருத்து. ஜைன மரபானது திருக்குறளைத் தமிழ் நிலத்தில் ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பொ.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பொ.யு. முதல் நூற்றாண்டின் முந்தைய பாதியிலும் வாழ்ந்த தென் பாடலிப்புத்திர திராவிட சங்கத்தின் தலைவரும் ஜைன ஆச்சாரியருமான குந்தகுந்த ஆச்சாரியருடன் தொடர்புபடுத்துகிறது என்று ஏ. சக்ரவர்த்தி கூறுகிறார். எனினும், பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதாம்பர சமண நூல்களிலோ திருவள்ளுவரைப் பற்றியோ திருக்குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் திருக்குறளும் குறிப்பிடப்பட்டிருக்கையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16- ஆம் நூற்றாண்டில்தான்.

 

திருக்குறளும் சமணமும் பற்றி

  1. திருக்குறள் - ஜைன உரை - தஞ்சாவூர் சரசுவதி மஹால் வெளியீடு எண் 336 சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்: கே.எம்.வேங்கடராமையா (முனாள் பேராசிரியர்) - 1991  (TamilDigitalLibrary)
  2. திருக்குறள் ஒரு சமண நூல் (AhimsaiYatirai-Blog)
  3. JainismRevival 

திருவள்ளுவர் / வள்ளுவர் என்று கூறப்படும் ஸ்ரீ குந்தகுந்தர் (குந்த குந்தர்) வீற்றிருக்கும் ஆலயம் @ கரந்தை, தஞ்சாவூர்

ஸ்ரீ குந்த குந்தர் நாதர் இருக்கும் ஆதீஸ்வர ஸ்வாமி ஆலயம் / பகவான் ஆதிநாத் திகம்பர ஜெயின் கோவில்

  • Shri Aadheeswara Swamy Jinalayam (as per Express)
  • Name in Google Maps: Shri 1008 Bhagwan Adinath Digambar Jain Temple
  • Address: Door No. 4, Jain Street, Karandai, Tamil Nadu 613002, India
  • Plus Code: R43P+M2 Thanjavur, Tamil Nadu, India 
Source: Facebook - JainismRevival (for zeroing down on Thiruvalluvar statue at Aadheeswara Swamy),  Jain Study (for zeroing down on Aadheeswara Swamy Jinalayam at Karanthai, Thanjavur)

Key Words: Jainism Thiruvalluvar Tiruvalluvar Tirukkural Thirukkural Valluvar சமணம் ஜைனம் வள்ளுவர் திருவள்ளுவர் திருக்குறள் கோவில் கோயில் ஆலயம் Aadheeswara Swamy Jinalayam Thiruvalluvar Jain Temple Acharya Kunda Kunda  Digambar ஸ்ரீ குந்த குந்தர் ஸ்ரீ குந்தகுந்தர் Adinath Digambar Jain Temple Tamil Nadu தமிழ்நாடு சமணர் கோவில்