Curated 005: எது வாழ்க்கை? - What is Life?
எது வாழ்க்கையை வாழக்கூடிய முறை ?
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
எது வாழ்க்கையோட வழி ?
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!
- சுப்ரமணிய பாரதி
துன்பம் நெருங்கி வந்தபோதும் - நாம்
சோர்ந்து விடலாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வமுண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
- சுப்ரமணிய பாரதி
.png)
Join the conversation