இந்த வலைத்தளம் 1 மில்லியன் பார்வைகளை 6-Oct-2022 அன்று தொட்டது. Stats அப்படித்தான் சொல்கிறது. ஒரு விள்ளல் சந்தோஷம்.
நவம்பர் 2022 இல் 70580 பார்வைகள் பெற்று ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு மாதமும் 45000-53000 பார்வைகள் தான் வரும். பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் google தேடலில் மேலே வந்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
அன்புடன்
ராஜேஷ்
Hi Rajesh, This is senthilvel. I am regular visitor to your website for kural research. Your work is excellent. I would like to connect with you if possible. Appreciate if you drop an email or any other means to reach out to you. Thank you so much for all the great work !! Thanks again.
ReplyDeleteThank you SenthilVel for your comments
Deleterajeshbalaa@gmail.com
Deleteமதிப்பிற்குரிய ராஜேஷ்,
Deleteதங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.அவனிவன் பக்கங்கள் என்ற தலைப்பில் கலிபோர்னியா விலிருந்து இன்னொருவர் எழுதுவதும் தாங்கள் எழுதுவதும் வார்த்தை மாறாமல் அப்படியே உள்ளமை வியப்பாக உள்ளது.இருவரும் ஒருவரா?
நன்றி.. அவர் பெயர் அசோக் சுப்ரமணியன். நாம் திருக்குறளை கற்றுக்கொண்டு இருக்கும் பொழுது அவர் பக்கத்தையும் தொடர்பு கொள்வேன். அதில் அவர் தமிழின் மற்ற இலக்கியங்கள் குறிப்பாக ராமாயணத்தில் இருந்து நிறைய எடுத்துக்காட்டுகளை கையாண்டு இருப்பார்..அவற்றை நான் வார்த்தை மாறாமல் எடுத்து இங்கு சொருகி இருப்பேன்..அவற்றுக்கு credits ஆக மேலும் அசோக் உரை என்று வலை பின்னூட்டம் கொடுத்தும் இருப்பேன். நாம் எழுதிய காலம் 2014 ஆண்டுகளிலேயே அவரை தொடர்பு கொண்டு அவரிடம் அனுமதி பெற்றே பதிவு செய்தேன்.
Deleteஎன்னுடைய அணுகுமுறை எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் மனப்பாடம் பற்றி எழுதிய கட்டுரையிலும் குறளினிது என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் (YouTube) இல் சொன்னது போன்று வார்த்தைக்கு வார்த்தை பல அர்த்தங்களை அறிந்தும் மற்ற உரைகளையும் அருகில் துணைகொண்டு எனக்கு எது பொருள் என்று கண்டேனோ அதை எழுதினேன்..அதன் பிறகு தொடர்ந்து பல பதிவுகளை மேம்படித்தி உள்ளேன்.. ஜெயமோகனின் வெண்முரசு வில் வரும் தொடர்புடைய வரிகளும் பதிவு செய்து உள்ளேன். அது இக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளவும் திருக்குறளை இன்னும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
அது ஜெயமோகன் எனக்கு பதில் எழுதிய கடித்ததிலேயே உள்ளது..குறள் ஒரு மூல செவ்வியல் நூல். வாழ்நாள் முழுக்க குறளை அடிப்படையாக கொண்டு மற்ற நூல்களுடன் தொடர்பு படுத்தி கற்கலாம்
மதிப்பிற்குரிய ராஜேஷ் அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள் தங்களுடைய திருக்குறளின் பொருள் விளக்கம் அதற்கு தகுந்த எடுத்துக்காட்டான கதைகளும் மற்றும் வகையான சொற்களையும் நான் தினமும் படிப்பதுண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.அதைப் படித்துவிட்டு அதை நான் நண்பர்கள் உடன் கலந்துரையாடுவது உண்டு.
ReplyDeleteதங்களது இந்த நல் செயலை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அநேக நன்றிகள் மேலும் மேலும் தொடரட்டும் உங்களின் தமிழ் ஆர்வம்.
இது காலத்தின் அழியா சொத்து எத்தனை தலைமுறை இருக்கும் இது மிகவும் பயன் தரும்.
வாழ்க வளமுடன் வாழ்வில் எல்லா வளமும் செல்வமும் பெற்று தாங்கள் எழுத்து பணி தொடர நான் பிரார்த்தனை செய்கிறேன்.
மிக்க நன்றி
ReplyDeleteஎனக்கு தேவையான குரளை தேர்ந்தெடுப்பது எப்படி
ReplyDeleteநீங்கள் எதில் இருந்து இவ்வலைத்தளத்தை பயனபடுத்துகிறீர்கள்?
Delete1. mobile - இந்தப் பக்கத்தில் கிழ்-இல் - view in web version என்று இருக்கும். அதை பயன்படுத்துனீர்கள் என்றால், web version தங்களுக்கு இந்த வலைத்தளத்தில் முழு வடிவத்தையும் காண்பிக்கும். அதில் மேலே search இருக்கும். அதை பயனடுத்தலாம். அல்லது. வலதுபக்கம் labels களின் உதவியுடன் பார்கலாம். ஒரிரு முறை முயன்று பயிற்சி செய்தால் கற்றுக்கொள்ளாம்.
2. desktop - வலைத்தளத்தில் மேலே search இருக்கும். அதை பயனடுத்தலாம். அல்லது. வலதுபக்கம் labels களின் உதவியுடன் பார்கலாம். ஒரிரு முறை முயன்று பயிற்சி செய்தால் கற்றுக்கொள்ளாம்.
3. google - google web page இல் குறளின் எண் அல்லது குறளின் ஒரு பகுதியை தட்டச்சு செய்து daily project thirukkural என்று தட்டச்சு செய்தால், பெரும்பாலும் முதல் சுட்டி உங்களுக்கு தேவையான் இத்தளத்தில் சுட்டியாக இருக்கும். அதை தட்டி வாசிக்கலாம்.
உதாரணம் 1: குறள் 444 daily project thirukkural
உதாரணம் 2: புகழ்ந்தவை போற்றி daily project thirukkural