குறள் 968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
[பொருட்பால், குடியியல், மானம்]
பொருள்
மருந்தோ - மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை
மருந்தோ - மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை
மற்று -ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு.
ஓம்பும் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.
தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.
பெருந்தகைமை - பெரும் தன்மை; பெரும் பொறுமை; பெரும அழகு -
முழுப்பொருள்
பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.
அழிய - அழித்தல் - aḻi- 11 v. tr. caus. of அழி¹-. 1.To destroy, exterminate; சங்கரித்தல் (கந்தபு.நகரழி. 6.) 2. To spend; செலவழித்தல் தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை). 3. To ruin, dam-age; கெடுத்தல் 4. To efface, obliterate; கலைத்தல் கோல மழித்தி யாகிலும் (திவ். நாய்ச். 2, 5). 5. Todisarrange; குலைத்தல் ஈடுசால் போரழித்து (சீவக.59). 6. To change the form or mode of; உள்ளதை மாற்றுதல் உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல். பொ 262, உரை). 7. To cause to forget; மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர் (சிலப். 7, 43). 8. To smear; தடவுதல் சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா. சிவபுண்ணிய.225). 9. To leave off, bring to a close; நீக்குதல் (கலித். 131, 34.)
வந்த - வருதல்
இடத்து- இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி
மானத்தை உயிருக்கு இனையாக வைக்கிறார் திருவள்ளுவர். மானத்துடன் இருப்பது உயிருடன் இருப்பதற்கு சமம். மானம் இல்லையேல் உயிர் அற்றதற்கு சமம். ஆதலால் வாழ்ந்தால் மானத்தோடு வாழு இல்லையேல் இறப்பதே மேல் என்று முன்னர் ஒரு குறளில் கூறியிறுந்தார் திருவள்ளுவர்.
ஒருவருடைய பெரும் மதிப்பும் புகழும் பெருமையும் குறைந்தாலோ அல்லது அழிந்தாலோ அவர் மானம் இழந்தவராக ஆகிறார். அப்படி மானம் இழந்தும் இவ்வூன் உடம்பை போற்றி வாழும் வாழ்க்கை மடியாமல் இருப்பதற்கு மருந்தாகிவிடுமா? என்று கேட்கிறார் திருவள்ளுவர்.
மானமே மாகனம் என்றில்லாமல், ஏது செய்தாவது உடம்பை வளர்ப்பதை, அதுவே சாவாமைக்கு மருந்தென்று கொள்வது பெருமைபட வாழ்ந்ததைப் பொருளில்லாமல் ஆக்குவது.
நாலடியாரின் இவ்வரிகள் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.
“மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன விளிவினால் வாழ்வேன்மன்” (நாலடி 40)
“இழித்தக்க செய்தொருவன் ஆர வுணலின்” (நாலடி 302)
அறநெறிச்சாரப் பாடலொன்றும் இக்கருத்தை ஒட்டியது.
“தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால்
உணற்கு விரும்பும் குடரை – வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பத்தாம் கொள்வ தறிவு” (அறநெறி 156)
“வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்” (நாலடி 300)
“புன்னுனை நீரின் நொய்தாய்ப் போதலே புரிந்து நின்ற
இன்னுயிர் இழத்தல் அஞ்சி இற்பிறப் பழிதல் உண்டே” (கம்ப.சடாயு உயிர்நீத்த 70)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மே¢ல் நின்றது.).
மணக்குடவர் உரை
தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ. பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.
மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
சாலமன் பாப்பையா உரை
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.
No comments:
Post a Comment