குறள் 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
முழுப்பொருள்
தன்னை அழிக்க நினைக்கும் பகைவரிடம் உயிரையும் பொருளையும் இரந்து (யாசித்து) பகைவரின் தயவால் வாழ்தலை விட ஒருவன் அழிந்து கெட்டான் (அல்லது இறந்தான்) என்றென்பதே பெரிது.
[பொருட்பால், குடியியல், மானம்]
பொருள்
ஒட்டார் - பகைவர்
ஒட்டார் - பகைவர்
பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.
சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.
வாழ்தலின் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
அந் - அந்த
நிலையே - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.
கெட்டான் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
எனப்படுதல் - என்றறியப் படுதலே
கெட்டான் எனப்படுதல் – அழிந்துபட்டான் என்றறியப் படுதலே
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
தன்னை அழிக்க நினைக்கும் பகைவரிடம் உயிரையும் பொருளையும் இரந்து (யாசித்து) பகைவரின் தயவால் வாழ்தலை விட ஒருவன் அழிந்து கெட்டான் (அல்லது இறந்தான்) என்றென்பதே பெரிது.
மானம் இல்லாமல் உயிர் வாழ்வது பிணம் போல் தூர்நாற்றம் வீசிக்கொண்டு வாழ்வதுப்போல் ஆகும். ஆதலால் மானம் இல்லையேல் செத்து மடி.
மானத்தை உயிருக்கு இனையாக வைக்கிறார் திருவள்ளுவர். மானத்துடன் இருப்பது உயிருடன் இருப்பதற்கு சமம். மானம் இல்லையேல் உயிர் அற்றதற்கு சமம். ஆதலால் வாழ்ந்தால் மானத்தோடு வாழு இல்லையேல் இறப்பதே மேல் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க (நாலடி 78)
என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ (நாலடி 292)
பரிமேலழகர் உரை
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம'¢ என்பாரை நோக்கிக் கூறியது.).
மணக்குடவர் உரை
ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
மு.வரதராசனார் உரை
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
No comments:
Post a Comment