Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

 

குறள் 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

உற்றான் - உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி.

அளவும்அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.

அளவும்அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை 

காலமும் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கற்றான் -  நூலறிந்த கற்றுச் சிறந்த மருத்துவன்

கருதிச்  - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு நோயாளியின் நோய்க்கு ஒரு மருத்துவர் எவ்வாறு மருந்து கொடுக்க வேண்டும்?

1. நோயாளியின் தன்மையை முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது நோய் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். நோயாளியின் உடம்பின் தன்மையை உடம்பு செயல்படும் விதங்களை வைத்தும் அறிகுறிகளை வைத்தும் இன்றையகாலகட்டங்களில் பரிசோதனைகள் மூலமும் அறிந்துக்கொள்ளலாம். நோயாளியின் வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

2. நோயின் தாக்கத்தையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு நோய் ஆரம்பகட்டங்களில் இருந்தால் அதற்கு மிதமான மருந்துகளையும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்களும் உடல்பயிற்சிகளுமே சரி செய்துவிடும். அதுவே நோய் முற்றிய நிலையில் இருந்தால் மருந்துகள் கண்டிப்பாய் எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்களில் பல படிநிலைகளில் உண்டு அவை. Psychic (மிதமான அறிகுறிகள், நாம் பழகும் முறைகளில் மாற்றம் தென்படும்), Psychosomatic (அறிகுறிகள் அவ்வப்போது வெளிப்படையாகவே தென்படும்), Somatic (அறிகுறிகள் வெளிப்படையாக தொடர்ந்து தென்படும், உள் உறுப்புகள் பாதிப்படைய துவங்கிவிடும்), Organic (நோய் முற்றி பல உறுப்புகள் தீவரமாக பாதிப்படைந்து குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும்). இப்படிநிலைகளுக்கு ஏற்றார்ப்போல் மருந்துகள் (அல்லது மருந்துகளின் அளவு) மாறும்.

3. நோய்க்கு மருந்து உட்கொள்ளும் நேரத்தையும் கணக்கில் கொண்டு மருந்து கொடுக்க வேண்டும். சில மருந்துகள் காலையில், மாலையில், மத்திய வேளைகளில் கொடுக்க வேண்டும். சில மருந்துகள் உணவுக்குப்பின் கொடுக்க வேண்டும். சில மருந்துகள் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். இப்படி நோய்க்கு ஏற்றவாரு காலத்தை கருத்தில் கொண்டு மருந்துகளை கொடுக்க வேண்டும். மேலும் மருந்தினை எத்தனை காலம் (வேலைகள், நாட்கள், மாதங்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூற வேண்டும். 

மேற்சொன்ன மூன்றையும் கருத்தில் கொண்டு ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும். 

“அறுவை சிகிச்சை வெற்றிகரம், ஆனால் நோயாளி மரணம்” என்ற அளவில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது. நல்ல மருத்துவரே நல்ல மருந்துமாவார் என்பதைக் கூறும் குறளிது. இக்குறளின் குறிக்கப்படும் கால அளவு என்பது, மருத்துவம் செய்ய ஏற்ற நேரத்தையும், இருக்கின்ற கால அளவையும் குறிப்பதாகும். காலம் தாழ்த்திச் செய்வதோ, அல்லது காலத்திற்கு முன்பாகவே செய்வதோ, இரண்டுமே மருத்துவத்தில் தவிர்க்கப்பட வேண்டியன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.

மு.வரதராசனார் உரை
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

Thirukkural - Management - Health - Counsel for Physicians
Valluvar gives further counsel to medical practitioners through Kural 949. A learned physician should consider the capacity, both physical and mental, of the patient to withstand the treatment, the severity of the disease and the duration of the disease and treat the disease accordingly. This is also the sole responsibility of a learned physician.

A doctor should treat taking account 
Of the patient, the illness rind the time.

Valluvar has communicated through many Kurals his counsel to us that an individual has more responsibilities for preventing the occurring of diseases and curing them than a physician has. Your health is in your hands.

English Meaning - As I taught a kid - Rajesh
In this kural, Thiruvalluvar describes how to prescribe medicines
1. Understand the patient's nature. Understand whether the patient has any hereditary diseases in his family, the patient has any other diseases, the medicines (if any) currently taken by the patient, the lifestyle of the patient, the patients body vitals through clinical tests
2. Understand the patient's disease and its effect on the patients' body. Understand the stage of the disease in the patient (i.e., stage 1,2,3,4). Understand whether it is psychic, psychosomatic, somatic, organic etc
3. While prescribing the medicines, understand the amount of medicine, time interval between medicine and the timing of the medicine given, the total time duration of the medicine given.  Also understand that delaying the medicine would also increase complications of the disease.

Questions that I ask to the kid
Explain the process of prescribing a medicine or cure.

No comments:

Post a Comment