குறள் 880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
பொருள்
உயிர்த்தல் - உயிர்பெற்றெழுதல்; தொழிற்படுதல் மூச்செறிதல் மூச்சுவிடல்; ஈனுதல் மோத்தல் கூறுதல் வெளிப்படுத்துதல் இறந்துபடுதல் சொரிதல் இளைப்பாறல்.
உயிர்ப்ப - மூச்செறிதல்
உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்
அல்லர் - அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)
மன்ற - maṉṟa perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக
செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய்
செயிர்ப்பு - குற்றம்; சினம்.
செயிர்த்தல் - வெகுளுதல்; வருத்துதல்; குற்றஞ்செய்தல்.
செயிர்ப்பவர் - பகைவர்
செம்மல் - தலைமை; வலிமை; தருக்கு; பெருமையிற்சிறந்தோன்; இறைவன்; சிவன்; அருகன்; புதல்வன்; சாதிபத்திரி; முல்லைப்பூவகை; பழம்வகை; வாடாப்பூ; நீர்.
சிதைதல் - தன்மைகெடுதல்; சிதறுதல்; அறுபடுதல்; கோபித்தல்; சொல்சிதைந்துவழங்குதல்; பொய்யாதல்; குலைதல்; வரம்பழிதல்; இசைமுதலியனகெடுதல்
சிதைக்கலாதார் - அழிக்காதவர்
முழுப்பொருள்
அகங்காரம்: இவ்வுலகில் பல பகைகளுக்கு போர்களுக்கு அகங்காரமே காரணம். காமகுரோதமோகங்கள் அல்ல, அவற்றுடன் இணையும் அகங்காரமே பல பெரிய அறவீழ்ச்சியின் காரணம் ஆகும். மகாபாரதம் ஆனாலும் சரி இராமாயணம் ஆனாலும் சரி இதுவே காரணம்.
பகைவரின் அகங்காரம் அவரின் வலிமையில் இருந்து பிறப்பது. அதேப்போல் பகைவரின் அகங்காரம் நமது வலிமையின்மையாலும் பிறப்பது. ஆதலால் பகைவரின் அகங்காரத்தை முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும்.
பகைவரின் அகங்காரத்தை ஒருவர் ஒரு பொருட்டாக கருதி அதனை அழிக்கவில்லையென்றால் அந்த ஏளனத்திற்கு பரிசாக நமது அழிவே அமையும் ஏனெனில் மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்ப்டுவோம். ஆதலால் தமது பகைவரது செருக்கினை தெளிவாக அழிக்காதவர் உயிரோடு வாழ்வோருக்கு ஒப்பார் அல்லர். அவர் வாழ்க்கை முடிவுற்றதாகவே கருதப்படும்.
பகையென்பது எத்தகைய வலிமை கொண்டது என்பதைச் சொல்லி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் திருவள்ளுவர்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது.
மு.வ உரை
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
No comments:
Post a Comment