குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
மேலும்: அஷோக் உரை
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]
பொருள்
முழுப்பொருள்
தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை.
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.
அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
உடைய - uṭaiya part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)
நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.
அல்வழி - நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி
என்னுடைய நெஞ்சமே நெறிக்குப்புறம்பாக எனக்கு அணுக்கமாக இல்லை. அப்படி இருக்கையில் நான் விரும்புவர் என்னுடன் பற்றுடன் இருக்கவேண்டியவர் எப்படி அணுக்கமாக இருப்பார்?
ஆதலால், என் நெஞ்சமே எனக்கு அணுக்கமாக இல்லாத பொழுது என் தலைவர் அந்நியரைப்போல் எனக்கு அணுக்கமாக இல்லாமல் இருப்பதை எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.).
மணக்குடவர் உரை
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.
மு.வரதராசனார் உரை
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
No comments:
Post a Comment