குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]
பொருள்
முழுப்பொருள்
நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.
மறந்தேன் - மறத்தல் - maṟa- 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
மறத்தல் - maṟa- 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
அல்லா - வருத்தம்; மகமதியர்வழிபடும்கடவுளின்பெயர்.
மறக்கல்லா - மறக்க முடியாமல்
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
மாணார் - மாட்சிமையற்ற பகைவர்.
மாணா - மாட்சியற்று, பகை
மட - மடமை - பேதைமை
நெஞ்சின் -நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
பட்டு - பட்டாடை; பட்டுப்பூச்சியால்உண்டாகும்நூல்; கோணிப்பட்டை; சிற்றூர்; இருந்தேத்தும்மாகதர்; கட்டியம்; கள்ளிவகை.
மறக்கக்கூடாத பெண்ணின் நாற்பண்புகளில் ஒன்றான நாணத்தையும் மறந்துவிட்டேன். எதனால்? என்னுடைய மாட்சிமையற்ற பேதை நெஞ்சினால். எப்படி? தலைவனின் பிரிவினால் அவரை மறக்காமல் வாடிக்கொண்டு இருப்பது என்னவோ நானும் என் நெஞ்சுமும். ஆனால் தலைவனை கண்ட மாத்திரத்தில் என் பேதை நெஞ்சு அடக்கமற்று மன உறுதியற்று அவரை தழுவ என்னை அவருடன் கூட வைத்தது. நாணத்தை மறந்து அவருடன் ஊடாமல் கூடினேன் என்று கூறுகிறாள் தலைவி.
தலைவனை கண்ட உடன் கூட நினைத்ததால் அவள் நெஞ்சு மாட்சிமையற்றது எனவும், அடக்கமற்றும் மன உறுதியற்றும் கண்ட உடனே கூடியதால் நாணம் மறந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும்: அஷோக் உரை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.) .
மணக்குடவர் உரை
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.
மு.வரதராசனார் உரை
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
சாலமன் பாப்பையா உரை
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
No comments:
Post a Comment