குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]
பொருள்
முழுப்பொருள்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.
நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்
மென் - - மெல்லிய - மென்மையான
தோளும் - தோள் - புயம்; கை; தொளை.
நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்
அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை
நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
ஆண்டு - அகவை; அவ்விடம்
ஆண்டு - ஆள்(ளு)-தல் - āḷ- 2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.
அவள் - பெண்பால்சுட்டுப்பெயர்
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.
செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். பசலை நோய் அவளை வாட்டுகிறது. அப்பொழுது, அவள் கைகளில் இருந்து நழுவும் கைவளையல்களை பார்த்தாள். அதாவது அவருடன் முயங்க காரணமானது இந்தக் கைகள் தானே. நீ தானே அவர் மீது அன்பும் இப்பசலைநோய்க்கும் காரணம். பின்பு மெலிந்த அவள் தோள்களை பார்த்தாள். அதாவது அவரை தழுவிய தோள்கள் தான் இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். பின்பு அவளுடைய கால்களை பார்த்தாள். அதாவது தலைவனை தேடிச்சென்று தழுவ இக்கால்களே நடந்தது. இதுவே இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். தலைவன் பிரிந்தாலும் இவ்வுறுப்புகள் எல்லாம் தலைவனை நோக்கிச் செல்லும் என்பதை குறிப்பறிவுருத்துவதுபோல் இருப்பதாக தலைவி சொல்கிறாள். அதனால் தானும் தலைவனை நோக்கிச் செல்லப்போவதை உறுப்புகளின் ஊடாக குறிப்பாக உணர்த்துகிறாள்.
இது தலைவனுக்கு சொல்லப்பட்டதாகக் கூட இருக்கலாம். தலைவனே!நீர்(நீங்கள்) என்னைப் பிரிந்து சென்றால், என் கைகளும், தோள்களும், கால்களும் உங்களுடன் வரும். அதன்மூலம் நானும் வருவேன். ஆதலால் அது நடவாமல் பார்த்துக்கொள்ளவும். அதவாது நீர் எம்மை பிரிந்து செல்லாமல் இரும் என்பதை குறிப்பாக உணர்த்துகிறாள்.
இதுவும் பொருத்தமான பொருள் தான். ஏனெனில் என் சொந்தவாழ்விலும் சரி, எனது நண்பர்கள் சிலர் கூறியுள்ள தங்கள் அனுபவங்களிலும் சரி, மனைவிமார்கள் தலைவனை நோக்கி குறிப்பாக வெளியூர்களுக்கு செல்ல ஆயுத்தமாகும் வேலையில், நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் வந்து என்னை அழைத்துசெல்லவில்லை என்றால், நான் அங்கு வந்துவிடுவேன். திருவள்ளுவர் காலத்தில் பூடகமாக சொல்லப்பட்டது, இன்றைய காலக்கட்டங்களில் பகிரங்கமாக சொல்லப்படுகிறது. ஆனால், அன்பு ஒன்றுத்தான்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).
மணக்குடவர் உரை
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.
மு.வரதராசனார் உரை
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
சாலமன் பாப்பையா உரை
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
Comments
Post a Comment