குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]
பொருள்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
உள்ளத்தார் - மனதில் உள்ளவர்
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.
காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக
ஆக - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
உள்ளி - உள்ளு-தல் - uḷḷu- 5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )
நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
யார் - யாவர்
உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.
யாருழைச் - யார்மாட்டு
செறித்தல் - சேர்த்தல்; இறுக்குதல்; அடைதல்; அடக்குதல்; வைத்தல்; திணித்தல்; பதித்தல்; அணியாகஇடுதல்; அடைவித்தல்; ஏற்காதபொருளைச்செய்யுளிற்புகவிட்டுஉரைகூறுதல்; கொல்லுதல்; அழித்தல்; மூழ்குதல்; திரட்டுதல்; நெரித்தல்; மூடுதல்.
சேறி - தேடிச் செல்கிறாய்
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு
முழுப்பொருள்
ஏ நெஞ்சே! நாம் காதலித்த நம் தலைவர் நம் உள்ளத்திலேயே இருக்கிறார். அப்படி உன் உள்ளத்திலேயே அவர் குடிக்கொண்டு இருக்க, நீ யாரை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறாய் (பேதை) நெஞ்சே??? என்று தலைவி நெஞ்சே கேட்கிறாள்.
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். அப்பொழுது அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்பதை மறக்கும் அளவிற்கு பேதையாகிவிட்டாலாம்? அதனால் தான் தன் நெஞ்சிற்குள்ளேயே தலைவன் வாழ்வதாக கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறாள். அது பேதைத்தனம் என தெரிந்தப்பின்பு தன் நெஞ்சின் பேதமைதனத்தை (இக்குறளாக) சொல்லிக்கொள்கிறாள்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.
மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.
சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.
Comments
Post a Comment