Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்


குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
அனிச்சமும் - அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை.

அன்னத்தின் - அன்னம் - சோறு; புள்வகை; கவரிமா நீர் உணவுஅருந்தியஇடம்; பூமி ஒருவகைஅணி; தங்கம் மலம்; aṉṉam   * n. haṃsa. Speciesof swan, celebrated for its gait--poets credit itwith power to separate milk when mixed withwater--vehicle of God Brahmā; புள்வகை.  

தூவியும் - தூவுதல் - தெளிதல்; இறைத்தல்; அளக்கும்போதுஎளிதாகமேலேபெய்தல்; அருச்சித்தல்; மிகச்சொரிதல்; ஒழிதல்; மழைபெய்தல்.

மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்.

அடிக்கு - அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை
 அடி - (வி)அடிஎன்ஏவல்; புடை தாக்கு வீசு மோது கொல்லு.

நெருஞ்சிப் - ஒருமுட்பூண்டுவகை.

பழம் - கனி; வயதுமுதிர்ந்தோன்; கைகூடுகை; ஆட்டக்கெலிப்பு; முக்கால்.

முழுப்பொருள்
முகர்ந்தால் வாடக்கூடிய மிக மென்மையான மலர் அனிச்சம். அதைவிட மெல்லிய மலர் இல்லை என்பர். அன்னப்பறவையின் இறகுகளும் மென்மையானவை. ஆதலால் இவ்வுலகில் மென்மைக்குப் பெயர்ப்போன அனிச்சம் மலர்களும் அன்னப்பறவையின் இறகுகளும் கூட நெருஞ்சிமுள் போல குத்தும் என் காதலிக்கு அவள் காலடியில் போட்டால். அப்படி என்றால் என் காதலியின் கால்கள் எவ்வளவு மென்மை வாய்ந்தது. அவளும் எவ்வளவு மென்மையானவள் என்று கூறுகிறான் திருவள்ளுவர்.

சீவக சிந்தாமணி காப்பிய ஆசிரியருக்கும், இதே கற்பனை உதவியிருப்பதைக் காணலாம்.

“அம்மெல் அனிச்சமலரும் அன்னத் தூவியும்
வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் நிலவப் பூம்போதனநின் அடி” (சீவக.2454)

“அனித்த மிதிப்பினும் பனித்தல் ஆனா 
ஒளிச்செஞ் சீறடி” என்று பெருங்கதை (1:52.162:3 வரியும், அனிசத்தினும் மென்மையானது பாதமென்று கூறுகிறது

“...................தில்லைத் தண் அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும் நங்காய்” (திருச்சிற்.228)

“ஐயவாம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய
............பாதம்” (கம்ப.கோலங்கான் 14)

“தாருடை மலரினும் ஒதுங்த் தக்கிலா
வாருடை முலையோடு” (கம்ப.தைலமாட்டு 22)

“பஞ்சியட ரனிச்சம் நெருஞ்சி யீன்ற பழமாலென்
றஞ்சுமல ரடிகள்” (சீவக 341)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும். (முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.).

மணக்குடவர் உரை
அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அனிச்ச மலரும், அன்னப்அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

சாலமன் பாப்பையா உரை
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

No comments:

Post a Comment