இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், இரவு குறள் 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று

 

குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பன் - யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்

இல்லாயின் - இல்லையானால்

ஈர்ங் - ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

சென்று - செல்லும் , செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அற்று - அத்தன்மையானது

வந்தற்று - வருவதுபோலாம்

முழுப்பொருள்
யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் என்னவாகும்? கொடுத்து உதவ நெஞ்சில் ஈரம் உடைய அதாவது அன்புடைய மக்கள் பெருமை வாய்ந்த பெரிய உலகில் இருந்தும் யாசிப்பவர்கள் இல்லாமல் போயின் (ஈவரும் இல்லாமல் போவர் பின்பு அன்பும் குறைந்துவிடும்) இவ்வுலகம் மரப்பாவைகள் நடமாடும் இடத்திற்கு சென்று வருவதுப்போல் ஆகிவிடும். ஈதல் செய்வதால் ஏற்படும் புகழும், புண்ணியங்களும் இல்லாமையின் வானோர் உலகும் ஒருவருக்கு கிடைக்காது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்து” (புறநா 38:12-5)

பரிமேலழகர் உரை
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், 'ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர்', என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain