குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.
சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
கொள்கை - கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை.
பிழைப்பின் - பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்
சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
நின்ற - நின்று - niṉṟu id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )
கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
நின்றக்கடை - நிலைத்து விடுமானால்
முழுப்பொருள்
ஒருவரிடம் ஒழுக்கம்/ கோட்பாடு இயல்பாக இல்லையென்றாலோ குற்றஞ்செய்தாலோ அவருடைய குலத்தின் பெயர் கெட்டுவிடும். அதுவே ஒருவரிடம் நாணம் இல்லையென்றால் அவருக்கு வரக்கூடிய நன்மையெல்லாம் கெட்டுவிடும்.
அனைத்து நன்மைகள் எனில் பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் ஆகியவை அடங்கும் என்றுகூறுவார் பரிமேலழகர்.
நாணம் இருந்தால் ஒழுக்கம் தானாய் வரும். ஏனேனில் நாணத்திற்கு அஞ்சி ஒழுக்கத்தை பின்பற்றுவோரும் உண்டு. பின்பு ஒழுக்கம் பழகி ஒழுக்கத்தை விரும்புவர். நாணத்திற்கு அஞ்சினால் சோம்பல், மறதி ஆகியவற்றிக்கு இடம் கொடுக்காமல் இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் வினைத்திட்பத்தில் உறுதியாக இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் கல்வி, கேள்வி, செல்வம், காலம், பெரியோர், சிற்றினம் சேராது இருத்தல், கண்ணோட்டம், ஆள்வினை, ஊக்கம் போன்றவற்றிற்கு உரிய மதிப்பு கொடுப்பர். நாணம் நல்வழிப்படுத்தும். ஆதலால் ஒழுக்கத்தை விட நாணத்தை சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தில் கொண்டு திருவள்ளுவர் கூறியதாக கொள்ளலாம். அதில் தவறில்லை.
மேலும்: அஷோக் உரை
“கலத்தினிற் பிறந்தமா மாணியிற் காந்துறு
நலத்தினிற் பிறந்தது நடந்த நன்மைசால்
குலத்தினிற் பிறந்திலை கோளில் கீடம்போல்
நிலத்தினிற் பிறந்தமை நிரப்பி னாயரோ” (கம்ப.மீட்சி.65)
பரிமேலழகர் உரை
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
English Meaning - As I taught a kid - Rajesh
If a person is indisciplined or commits mistakes, his family name will be deteriorated . However, if a person is not ashamed of bad name then he would not get any good things in life such as education, character, work, social groups etc. Because if a person is ashamed of getting a bad name or reputation, then he will automatically follow discipline, will have bias for action, will not be lethargic, will be afraid to do mistakes, will be afraid of being part of wrong people, groups, habits. So the feeling of being ashamed itself will drive a person in good path
Questions that I ask to the kid
What happens to a person if he/she is not ashamed of bad repute?
What happens to a person if he is ashamed of bad repute and stays away from it?
No comments:
Post a Comment