குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)பொருள்
ஏதம் - துன்பம், குற்றம், கேடு
பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பெருஞ்செல்வம் - பெரிய செல்வம்
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
துவ்வான் - துவ்வாதவன் - வறிஞன், tuvvātavaṉ n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன்.
தக்கார்க்கு - தக்கார் - தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.
இலாதான் - இல்லாதவன்
முழுப்பொருள்
செல்வத்தை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டு பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உதவாதவன் உதவ மனமில்லாதவன் வறிஞன். ஏனெனில் அவனிடம் கொடுக்க ஏதுமில்லையே. அவன் பிறரிடம் இலாபமாக உழைப்பாக பெறமட்டுமே முடிகிறது. கொடுக்க மனமில்லை. ஆதலால் அவன் வறிஞன். அதனால்தான் அவனை துவ்வான் என்று ஏளனப்படுத்துகிறார் திருவள்ளுவர். அத்தகையோரிடம் இருக்கும் பெருஞ்செல்வம் அவருக்கு துன்பத்தையே தரும். இன்பத்தை தராது என்று எச்சரிக்கைவிடுகிறார். ஆதலால் பெருஞ்செல்வம் அவனுக்கு ஒருவித நோயே. செல்வம் பெருக பெருக நோய் கூடிக்கொண்டே இருக்கிறது.
சேர்த்த செல்வத்தை தகுந்தவர்க்கு ஈந்து உதவாதவர்க்கு அச்செல்வத்தைக் காக்கின்ற கவலையே நோயாக மாறிவிடும். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வரன்றோ?
ஈயார் தேட்டை தீயார் கொள்வர் [மூலம்: கொன்றை வேந்தன் - ஔவையார்]
ஈயார் - கொடாதவருடைய (கருமி, கஞ்சன்),
தேட்டை - சம்பாத்தியத்தை,
தீயார் - (கள்வர் முதலிய) தீயவர்,
கொள்வர் - அபகரிப்பர்
ஏழை மற்றும் யாசிப்பவர்களுக்கு உதவி செய்யாமலும், சேர்த்த சொத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாமலும் இருக்கும் கருமியின் செல்வம், அவனுக்கும் பயன்படாமல், திருடர்களால் அபகரிகப்படும்.
உதாரணமாக முத்து திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கீழே காணலாம்.
(முத்து திரைப்பட காட்சி)
பணக்காரர்: கும்புட்ரேன்ய்யா _/\_
வயதான (துறவியான ரஜினி): ஹ்ம்ம்
பணக்காரர்: என்னை ஞாபகம் இருக்கய்யா?
வயதான (துறவியான ரஜினி): இல்லை
பணக்காரர்:
பதினைந்து வருடம் முன்னால காசில உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன்ய்யா.
அதுக்கு அப்புறம் நான் ரொம்ப பெரிய ஆளாக ஆயிட்டேன்ய்யா.
நீங்க இங்க இருக்கீங்கனு கேள்விப்பட்டேன் அதான் உங்கள பாத்துட்டுப்போலான்னு வந்தேன்.
அய்யா, அடியேனுடைய காணிக்கை.
வயதான (துறவியான ரஜினி): என்ன இது?
பணக்காரர்: (பண மூட்டையை திறந்து காண்பிக்கிறார்)
வயதான (துறவியான ரஜினி): (சிரிக்கிறார்)
வயதான (துறவியான ரஜினி): இத வெச்சுகிட்டு இந்த ஜடம் என்னய்யா பன்னப்போது?
பணக்காரர்:
எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமாய்யா?
இந்த உலகத்துல இது இல்லாம உயிர் வாழவே முடியாதுயா.
இத வெச்சு எத வேணும்னா வாங்கலான்ய்யா.
வயதான (துறவியான ரஜினி): (விழி விரித்து ஆச்சர்யமாக பார்க்கிறார்)
வயதான (துறவியான ரஜினி): இப்ப உனக்கு என்ன வேணும்?
பணக்காரர்: உங்க ஆசீர்வாதத்துல்ல எல்லா வசதியும் இருக்குயா.. ஆனா வாழ்க்கைல எனக்கு நிம்மதி மட்டும் இல்லைய்யா
வயதான (துறவியான ரஜினி): (கைக் தட்டி பலமாய் சிரிக்கிறார்)
வயதான (துறவியான ரஜினி): ஹ்ம்ம்ம்.. இத வெச்சுகிட்டு உலகத்துல எத வேணும்னா வாங்கலாம்னு சொன்னீங்க? நிம்மதிய வாங்கிற்லாமேயா? ஹான்?
எல்லார் பணத்தையும் நீயே வெச்சுகிட்டா, நிம்மதி எப்படியா வரும்?
உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ அளவா வெச்சுகிட்டு மிச்சதை இல்லாதவங்களுக்கு கொடுத்துகிட்டே இருந்தா நிம்மதி தானா வரும்.
பணத்த சேத்துக்கிட்டே இருப்பாங்க, அவனுக்கு நிம்மதியே இருக்காது
புண்ணியத்த சேத்துக்கிட்டே இருப்பான்ல அவனுக்கு தான் நிம்மதி.
ஹ்ம்ம்ம்
ஆமா, வருமோதும் எதுவும் கொண்டுவரல போமோதும் ஒன்னும் கொண்டுப்போ போறர்து இல்ல. நடுல என்னய்யா என்து என்து என்துனு
வயதான (துறவியான ரஜினி): (தலையில் அடித்துக்கொள்கிறார்). த த.. போ போ
வயதான (துறவியான ரஜினி): இத எடுத்துட்டு இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டுப்போ
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்
குறைபதி மற்றப் பொருள் (நாலடி 280)
“.......ஒண்பொருள், செய்வம்என் பார்க்கும் துயில்இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்” (நான்மணி.7)
பரிமேலழகர் உரை
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.
மு.வரதராசனார் உரை
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
English Meaning - As I taught a kid - Rajesh
A person might have enormous amount of wealth that is lot more than required, yet, if he does not have the heart to help others who need help in the form of food, shelter, education, opportunity etc, then, such a person is considered to be in poverty, despite having enormous wealth and that wealth is a disease which will only give pain. Because, only a person in poverty cannot help others. A wealth that is not shared with others over a period of time would be stolen by people around him and would be lost through various means. Such a wealth will not give peace and would be a root cause of unhappiness.
Questions that I ask to the kid
A wealth person is called poor. Explain the paradox
No comments:
Post a Comment