குறள் 790
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]
பொருள்
இனையர் - இனை - iṉai adj. of this degree (in respect of size or quantity இன்ன, as in "இனைத் துணைத்து" (குறள்)
இவர் - இவன், இவள்என்பவற்றின்பன்மை; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச்சொல்.
எமக்கு - எனக்கு
இன்னம் - இத்தன்மையுடையேம்; காண்க:இன்னும்; இனிமேலும்
யாம் - தன்மைப் பன்மைப் பெயர்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
புனையினும் - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர்.
புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
முழுப்பொருள்
இவர் எனக்கு இவ்வளவு நெருக்கமான நண்பர், இவர் என் வாழ்வில் மிக இன்றியமையாதவர், இத்தன்மையால் எனக்கு இவர் நண்பர் என்று நண்பர்களை / உறவுகளை அலங்காரமாய் சொல்லுவது (அல்லது அணிகலன் இடுவதுக் கூட) , (நண்பர்களை best friend சிறந்த நண்பர், close friend நெருங்கிய நண்பர் என்றெல்லாம் வகையரை செய்து சொல்வது (எண்ணம் கொள்வது)) நட்பிற்கு செய்யும் இழிவாகும்.
மனதார உண்டான நட்பு நட்பைப் பற்றி வீண்பெருமைப் பேசாது. பிறரிடம் பெறக்கூடிய சில ஆதாயங்களுக்காக தாம் சில பெரியமனிதர்களோடு சிறந்த நட்பைக் கொண்டிருப்பதைப் போல் அவர்களுடன் ஒன்று கலந்து உரைப்பர். ஆனால் அது நட்பை கொச்சைப்படுத்துவது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”முகனமர் கிளவி முன்னின் றுரைப்பின்
ஏதின்மை ஈனும் ஏனோர் மாட்டென” (பெருங் 4,8:6-7)
பரிமேலழகர் உரை
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும் நட்புவாடும்: ஆதலால் நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க.
மு.வரதராசனார் உரை
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை
இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.
No comments:
Post a Comment