நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், நட்பு குறள் 789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

 

குறள் 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
நட்பிற்கு - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

வீற்றிரு - īṟṟiru   VII. v. i. sit majestically or in state. சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், he is seated on the throne.

வீற்றிருத்தல் - சிறப்போடிருத்தல்; வேறுபாடுதோன்றஇருத்தல்; இறுமாந்திருத்தல்; தனிமையாயிருத்தல்; கவலையற்றிருத்தல்.

வீற்றிருக்கை - வீற்றிரு-.Throne; அரசிருக்கை.

யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

கொட்பு - சுழற்சி; சுற்றித்திரிகை; மனச்சுழற்சி; சரராசி; வளைவு; கருத்து; நிலையின்மை

இன்றி - இல்லாமல்

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்

ஒல்லும் - செய்ய முடிந்த

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

ஊன்றும் -  ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

முழுப்பொருள்
ஒரு நல்ல நட்பிற்கு சிம்மாசனம் யாதெனில் எவ்வித காலத்திலும் நிலையிலும் மனக்கலக்கம் கொள்ளாது மனதில் வளைவுகல் இன்றி மனதால் உடன்பட்டு எக்காலத்திலும் நிலைத்து வாழும் நிலையை பெறுதலே ஆகும். 

இக்குறளில் நாம் முக்கியமாக காண வேண்டியது
1. கொட்பின்றி - மனதில் கலக்கம் இல்லாது இருத்தல். முகத்தால் சிரித்து பேசி மனதால் விலக்கம் கொள்ளாது இருத்தல். மனதால் உடன்பட்டு இருத்தல்
2. ஒல்லும்வாய் - மனதால் உடன்படுதல். கருத்துக்களால் முரண்படலாம். அதில் தவறில்லை. ஆனால் மனதால் விலக்கம் கொள்ளகூடாது. 
3. ஊன்றும் நிலை - சில காலம் நண்பர்களுக்குள் ஊடல் என்பது சகஜம். ஆயினும் அவன் என் நண்பன் அவன் எனது நன்மைக்கு தான் சண்டைப்போட்டான் கண்டித்தான், அவன் கருத்தில் அவன் சரி, அவன் என்னிடம் ஒன்றை சொல்லவில்லையென்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும், அவன் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டியதில்லை அவனுக்கு அவ்வுரிமை உண்டு எண்ணும் நிலைத்த உறுதிப்பாடே நட்பாகும்.

ஒரு பண்பை கிடைத்தற்கு அரிய உயர்ந்த பொருளாகக் கொள்வதும், சொல்வதும் இலக்கியத்தில் பலமுறைக் காண்கின்ற ஒன்றே. “குணமென்னும் குன்று”, “பண்பென்னும் அரியணை” என்றெல்லாம் படிக்கிறோமே! நட்பென்னும் பண்பையே அரியாசனத்தில் ஏற்றிச் சொன்ன முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மேலோர் நட்பின் இடையறாவாய்” (கம்ப.மிதிலைக் காட்சி 13)
“காக்கவும் கிற்றிலன் காதல் நண்பரைப்
போக்கவும் கிற்றிலன் ஒருவன் போய்ப்பிணி
ஆக்கவும் கிற்றிலன் வென்றி யாருயிர்
நீக்கவும் கிற்றிலன் என்று நின்றதால்” (கம்ப.பிரமாத்திரப் 40)

பரிமேலழகர் உரை
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.).

மணக்குடவர் உரை
நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல்.

மு.வரதராசனார் உரை
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain