குறள் 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து
[பொருட்பால், படையில், படைமாட்சி]
பொருள்
பொருள்
தார் - பூ; பூவரும்பு; பூமாலை; பூங்கொத்து; கிண்கிணிமாலை; சங்கிலி; ஒழுங்கு; படை; கொடிப்படை; கிளிக்கழுத்தின்கோடு; பிடரிமயிர்; கயிறு; காண்க:தார்க்குச்சு; தோற்கருவிவகை; உபாயம்; ஏரிஉள்வாயிலுள்ளபுன்செய்; உடைமையைக்குறிக்கும்ஒருசொல்; வீடு; கீல்எண்ணெய்.
கொடிப்படை - படையின்முன்னணி; koṭi-p-paṭai n. id. +.Front rank of an army, van; சேனையின் முன்னணிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படைநிறீஇ (பெருங். மகத. 24, 39).
தாங்கிச் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்.
செல்வது - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம்.
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
வருதல் - வருதல்
தலைவந்த - தம்மை தாக்கப் பகைவரால் வியூகம் அமைக்கப்பட்டு எதிர்வரும் படையினர்
போர் - சண்டை; மல்யுத்தம்; இகல்; செறிந்துபொருந்துகை; குவியல்; சாணி; கதிர்வைக்கோல்களின்படப்பு; சதயநாள்; மரப்பொந்து.
தாங்கும் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்.
தன்மை - குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி
அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
முழுப்பொருள்
படைக்கொண்டு வந்த பகைவரின் போர் வியூகங்களை(தந்திரங்களை) அறிந்து உணர்ந்து அதனை எதிர்த்து தாக்கி வெற்றிப்பெறக்கூடிய போர் தந்திரத்தை அமைத்து, படைக்கொண்டுப் பகைவரை வெல்வதே ஒரு படைக்கு மாட்சியாகும். செயலாக்கத்தைவிட சிந்தனையாக்கத்தை முதலாக வைத்துச் சொல்லும் குறள்.
“தார்” என்னும் சொல் படை வகுப்பைக்குறிப்பதாகும். பரிமேலழகர் உரை படைவகுப்பை வியூகம் என்று சொல்லி, அதன் வகைகளை வடநூலார் சொல்லிய வண்ணம் குறித்துள்ளார். பண்டைய போர் முறைகளில், படைகள் நேர் நின்று பொருதியதால், காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை போன்றவற்றில் தம் வலிமை, எதிரிகளின் வலிமை இவற்றை அறிந்து, தம் படை எதிரிகளின் தாக்குதலில் சிதறாவண்ணம் வியூகத்தை அமைப்பது வழக்கம். மஹாபாரதப் போரிலே பல வியூகங்கள், குறிப்பாக சக்ரவியூகம், பத்மவியூகம் இவற்றைப் பற்றி குறிப்பிடப்படுவதைக் காணாலாம்.
தனது தலைவனின் மீது தனது படைவீரர்களுக்கு உள்ள நம்பிக்கையே இங்கு செருக்கே விளங்குகிறது. அதற்கு ஏற்றவாரு தலைவன் இருத்தல் வேண்டும். ஒரு தலைவன் இடத்தில் எதிரியை வெல்லும் வியூகமும், எதிரிக்கு தலைவன் மீது அச்சமும் தேவை. அது தலைவனின் செயல் இருந்து வரும். கிரிக்கேட் விளையாட்டில் ஒரு அணி தனது முந்தைய வெற்றிகளை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. தற்போதைய அணியின் தலைவன் எவ்வாறு ஒழுக்கமாக விளையாட்டை அணுகுகிறான் என்பதும் மிக முக்கியம். ஒழுக்கம் (disciplined approach), வியூகம் (Strategy), சிந்தனை திறன்(thought process), செயல்திறன் (implementation/execution skills), ஆகியவை மிக முக்கியம். ஒரு யானை உண்ணுவதானாலும் அதனை ஒரே அடியாக உண்றுவிட முடியாது. ஒரு யானையினையும் ஒவ்வொரு வாயாக தான் சாப்பிட முடியும். (How to eat an elephant? Bite by bite). அதுப்போல் தலைவனும் எப்பேர்பட்ட எதிரியையும் ஒவ்வொரு அடியாக தான் வெல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் எல்லோரையும் வெல்லலாம். அந்த நம்பிக்கையை வீரர் இடத்தில் உருவாக்கி தக்கவைத்தல் மிக அவசியமாகும்.
ஒரு நிறுவனம் வளர்ந்துவர வாடிக்கையாளர் மீது பரிவு வேண்டும், முதலீடு வேண்டும். இவையாவும் தூணாகும். ஆனால் ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய அரண் எனப்படுவது அந்நிறுவனத்தில் பணியாற்றும் திறமைவாய்ந்த ஊழியர்கள் ஆவார்கள்.
என்னுடைய MBA யில் Strategy Implementationஎன்று ஒரு பாடம் உண்டு. அதில் ஒரு கேள்வி கேட்கப்படும். உங்கள் வகுப்பில் எல்லோரும் 0 முதல் 100 க்குள் ஒரு எண்ணை சொல்லுங்கள். அந்த என் மற்ற எல்லொரும் சொல்லும் எண்களின் சராசரியில் மூன்றில் இரண்டு பங்காக இருத்தல் வேண்டும். யார் வகுப்பின் சராசரியிறின் மூன்றில் இரண்டு பங்குக்கு அருகில் சொல்கிறீர்களோ அவரே வெற்றியாளர். இது மற்றவர்கள் எப்படி சிந்திப்பர் என்று சிந்தித்து அதற்கு ஏற்றவாரு தனது வியூகத்தை மற்றிக்கொள்ளுதல். மேலும் நாம் நமது சிந்தனையை மாற்றுவோம் என்று எதிரியும் நினைக்கக்கூடும் என்று நினைத்து நமது சிந்தனையை மாற்றிக்கொள்ளுதலும் அடங்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து மேற்செல்லவல்லது படையாவது. இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம் செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.
No comments:
Post a Comment