Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 

குறள் 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
வினையான் - வினை செய்பவன்
வினையால் - செயல்களால்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

ஆக்கி - ஆக்குதல்  - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.

ஆக்கிக்கோடல் - செய்து கொள்ளல்

நனை  - பூவரும்பு; தேன்; கள்; யானைமதம்.

கவுள் - கன்னம்; யானையின்கன்னம்; யானையின்உள்வாய்; பக்கம்.

நனைகவுள் – மத நீர் ஒழுகும் கன்னங்களை உடைய (வெறியூட்டப்பட்ட)

யானையால் -  ஒரு யானையைக் கொண்டு

யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.

யாத்தல்- செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்.

அற்று - அத்தன்மையானது

யாத்தற்று - பிணைப்பது போன்றது

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுதே மற்ற செயல்களையும் செய்து நிறைவேற்றிக்கொள்வது என்றென்பது (உள்வாயில் இருந்து) மதநீர் ஒழுகும் யானையை (அதாவது கூடல் வேட்கையுடன் இருக்கும் யானை) மற்றொரு (கும்கி)யானையைக் கொண்டுப் பிடிப்பதுப்போலாகும்.  ஒரு செயலை செய்யும் பொழுதே, அதனால் வரும் பயன் அல்லது ஒத்த எண்ணங்களைக் கொண்டு மற்ற செயல்களைச் சாதிப்பது செயல் திறனாகும்.  ஆங்கிலத்தில் synergy என்று ஒரு வார்த்தை உண்டு. அது போலவே இதுவும். 

மதநீர் ஒழுகும் யானை என்றது கூடல் வேட்கை ஊட்டப்பட்ட யானையைக் குறிப்பது. இதே போன்று ஒரு செயலின் வேகத்தில், சாதிக்கவேண்டும் என்கிற வேட்கையைக் கொண்டே பிறசெயல்களை செய்து முடித்துக்கொள்வது அமைச்சர்கள் கொள்ளவேண்டிய செயல் திறனும் வகையுமாகும்.

உதாரணமாக நான் கார் (car), லாரி (Lorry, Truck) போன்ற வண்டிகளின் மைய இயந்திரங்களை(Engine) உற்பத்தி செய்யும் ஒரு மிகபெரிய நிறுவனத்தில் வேலை செய்தேன். அவர்கள் அங்கு Engineகளை உற்பத்தி செய்தாலும், அவர்கள் கூடவே அதற்கான /இயந்திரங்களுக்கான பாகங்களையும் (Engine parts) விற்றனர். ஆனால் அவர்கள் பாகங்களை தயார் செய்பவர்கள் அல்ல. அவர்கள் பாகங்களை மற்றவர்களிடம் வாங்கி இயந்திரத்தை தயார் செய்து விற்பார்கள். அதுவே பெரிய வேலை. அத்துடன் பாகங்களை விற்பதும் ஒரு வேலை தான். அதனையும் செய்வது அவர்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது. இதற்கென்று அவர்கள் பெரிதாக வேலை செய்யவில்லை. இதை தனியாக செய்தால் அது மிக பெரிய வேலை. பெரிய வேலையுடன் இதனை சேர்த்து செய்வதால் இது சிறிய அளவு வேலை பளு தான்.  அதற்கு ஆட்களை நியமித்து வேலையை முடித்தார்கள். லாபமும் நன்றாக இருந்தது (ஏனெனில் இதற்கென்று தனி கட்டுமான செலவுகள் அதிகம் இல்லை).

பழமொழி நானூற்றுப் பாடலொன்று இதே ஈற்றடியை வைத்துப் பாடல் செய்திருப்பதால், “யானையால் யானையாத் தற்று” என்பது ஒரு நன்கு அறியப்பட்ட பழமொழியாகவும், யானையைக் கொண்டு யானையைப் பிடிக்கும் பழக்கமும் நெடுங்கால பழக்கம் என்று தெரியவருகிறது. அப்பாடலானது:

ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மாணும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மான்அமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று. (பழமொழி 223)

“தெள்ளி உணரும் திறனுடையார் தம்பகைக்
குள்வாழ் பகைவர்ப் பெறுதல் உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முள்களையு மாறு” (பழமொழி,54.1)

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
In general multi-tasking is not productive. However, an effective leader or a person, whenever he or she does an bigger task, he would also accomplish other related tasks by taking advantage of the synergy associated with it. For e.g., a company that manufactures an engine can also sell its parts, a person visiting a big city for visiting a family or for a business meeting can also visiting nearby historical places/music concerts etc. As a caution, care should be taken that side tasks don't distract us from the main task

Questions that I ask to the kid
What is the difference between multi tasking and synergy? Who can pull off synergy? Give an example of synergy.

No comments:

Post a Comment