குறள் 608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
பொருள்
மடிமை - சோம்பல்
குடிமைக் - உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
தங்கின் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு
ஒன்னார்க்கு - ஒன்னார் - பகைவர்
அடிமை - தொண்டுபடும்தன்மை; அடிமையாள்; தொண்டன்
புகுத்தி - புகு-த்தல் - puku- 11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல்.
விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.
முழுப்பொருள்
ஒரு அரசனிடம் அல்லது ஒரு அரசிடம் சோம்பல் குடிப்புகுந்து தங்கும் என்றால் அது அவனுக்கு தீமையை தரும். எப்படிப்பட்ட தீமை தெரியுமா? அவ்வரசரின் பகைவருக்கு அவ்வரசை அடிமையாக்கி விடும். பிறருக்கு அடிமையாய் இருப்பதை விட தீது வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஏனெனில் அவர் மட்டும் அடிமையாகவில்லை. அவருடைய அடுத்த சந்ததியரும் அவரால் பாதிக்கபடுக்கூடும். மேலும் அவ்வடிமைத்தனத்தில் இருந்து பகைவர் மனது வைத்தால் ஒழிய வெளியே வரமுடியாது.
சோம்பல் ஒருவருக்கு வருவது தவிர்க்க முடியாது. ஆனால் சோம்பலை தங்கவிடுதல் மிக மிக தவறாகும். அதனை கடந்து செல்லவே ஒருவர் எல்லா வழிகளிலும் முயல வேண்டும்.
இது ஒரு நாட்டுக்கும் அரசுக்கும் மட்டும் சொல்லப்பட்டது அல்ல. இது தனிநபருக்கும் பொருந்தும். ஒரு தனிநபர் சோம்பலுற்றால், அவர் தன்னிடம் இருக்கும் எல்லா செல்வங்களையும் சிறுக சிறுக இழந்து அவருடைய பகையாகிய வறுமையிடம் அடிமையாகி துன்பத்தை அனுபவிப்பார் என்றும் பொருள் கொள்ளலாம்.
சோர்வில் இருந்து அப்படி மீள்வது என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் இக்கட்டுரை/இக்கடிதம் பயனுள்ளதாக இருக்கும் சோர்வு, மீள்தல் (சுட்டியை தட்டவும்)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்,
(மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.).
மணக்குடவர் உரை
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
மு.வரதராசனார் உரை
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
No comments:
Post a Comment