குறள் 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
பொருள்
செறுநரைக் - செறுநர் - பகைவர்.
காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
சுமக்க - சுமத்தல் - பாரமாதல்; சார்தல்; மிகுதல்:தாங்குதல்; மேற்கொள்ளுதல்; பணிதல்.
இறுவரை - முடிவு; அழியுங்காலம்; பெரியமலை; பக்கமலை; மலையின்அடிவாரம்.
காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கிழக்காம் - கிழக்காதல் - அழிவடைதல்
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
முழுப்பொருள்
பகைவரை கண்டால் அவரிடம் அங்கே பணிந்து செல்க. பகைவரின் அழியும் காலம் வரும் பொழுது அவரை அழியவிடுவதே சிறந்தது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
பகைவரை காணும் பொழுது பணிவது கொழைத்தனம் அல்ல ஏனெனில்
1) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் நாம் அறிவை இழந்து கோபட்டுக்கொண்டு வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் சென்றால் நாம் நமது ஆத்ம சக்தியை வீண் சண்டைகளில் விரையமாக்குக்கிறோம்.
2) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் சண்டைப்போடுவது நமது மனதை எப்பொழுதும் பதட்ட நிலையிலேயே வைத்திருக்கும். அது நமது உடலிற்கும் மனதிற்கும் தீமை பயக்கும்.
3) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் சண்டைப்போடுவது வருங்காலத்தில் இருவரம் பரஸ்பரம் பேசிப் பகையை அறுத்து உறவை வளர்க்க தடையாக இருக்கும். தேவையில்லாமல் பகை வளரும். காலமும் செல்வமும் விரயமாகும்.
4) பகைவருக்கு பதில் பேசாமல் அமைதியாக இருந்தால் பகைவரும் குழும்புவார். அவரும் பதில் பேசாமல் அமைதியாக இருப்பார். அமைதி நிலவும்.
"துஷ்டரைக்கண்டால் தூர விலகு" என்று ஒரு சொலவாடை உண்டு. இதற்காக தான் போலும்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர்.
('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.
மு.வரதராசனார் உரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா உரை
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
No comments:
Post a Comment