குறள் 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
பொருள்
செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.
கைப்பச் - kai-, 11 v. [K. M. kai.] intr. 1.To be bitter, astringent, unpleasant; கசத்தல் தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங். 6). 2. Tobe deeply afflicted; நைந்துவருந்துதல். கைத்தனளுள்ளம் (கம்பரா. மாயாசன. 30).--tr. 1. To dislike;to be angry with; to hate; கோபித்தல் மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423). 2. To vex, trouble,harass, torment; அலைத்தல் (W.)
kai -, 11 v. tr. cf. உகை-. 1. Toproduce, as a sound; to propel, shoot, as anarrow; செலுத்துதல் சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 2. To feed with thehand; ஊட்டுதல் காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப(மதுரைக். 659).
kai -, 11 v. tr. கை&sup5;. cf. தை-.To adorn, decorate; அலங்கரித்தல் மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419).
சொற் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
பொறுக்கும் - பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.
பண்பு- வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
பண்புடை - குணமிக்க; இயல்புடைய; அழகுடைய
வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
கவிகைக் - வளைவு; குடை; நன்மைதீமை; ஈகம், தியாகம்
கீழ்த் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.
தங்கும் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
ஒரு அரசன் தன்னைப் பற்றி மிகவும் கீழாக மலிவாக கடுமையான சொற்களைக் கொண்டுப் பிறர் விமர்சித்தாலும் ஏசினாலும் அதனை பொறுத்துக்கொண்டு இருந்தால் அத்தகைய பண்புடைய வேந்தனின் அரச குடையின் கீழ் இவ்வுலகம் தங்கும்.
ஏன் பொறுக்க வேண்டும்? ஏனெனில் ஒரு செயலை செய்தால் அதனை விமர்சிக்க குறைக்கூற பத்துப்பேராவது இருப்பார்கள். அரசர் என்றால் ஆயிரம் என்ன லட்சத்தில் கூட இருப்பார்கள். ஆதலால் அவற்றுக்கு கோபட்டுக்கொண்டு இருந்தால் மனதில் மகிழ்ச்சி இருக்காது. நிம்மதியும் இருக்காது. நாம் செய்கிற காரியத்தில் ஐயப்பாடு வந்துவிடும். பின்பு செய்யவேண்டிய செயலை செவ்வென செய்ய முடியாது. ஆதலால் குறைகளை கேட்டு அவற்றில் நியாயமானவற்றை கண்டு எடுத்து அதற்கு நிவர்த்திகளை செய்யவேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம். அப்பொழுது தான் சமநிலை இழக்காமல் செயலாற்ற முடியும்.
ஏன் அவ்வரசரின் குடையின் கீழ் இவ்வுலகம் தங்கும்? பொறுமையுடன் எல்லாவற்றையும் பொறுக்கும் மன்னர் அதனை நிவர்த்தியும் செய்கிறார். பகையை வளர்க்காமல் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுகிறார். அதனால் மக்கள் அவரை விரும்புவர்.
இதற்கு மிகப்பெரிய உதாரணம் மகாத்மா காந்தி அவர்கள். அவர் இந்தியாவின் சுதந்திரத்தை முன்னின்று வழிநடத்தியபொழுது அவர் பெறாத வசைகளே கிடையாது. (அவர் இறந்தும் இன்று வரை தொடர்கிறது). ஆனால் காந்தி அவற்றுக்கு செவி கொடுக்காமல் எல்லாவற்றையும் மனதார கேட்டார். காந்தி அவர்கள் எதிர் தரப்பில் இருந்தவருக்கும் சொல்வதற்கு ஒரு கருத்து இருக்கிறது என்று அவர்களை மதித்து அவர்களுடன் உரையாட அழைத்தார். காந்தி அவர்கள் சுவர்களை அமைக்காமல் பாலங்களை அமைத்தார். ஆதலால் அவரை எதிரி என கருதியவர்களும் பின்னாளில் நண்பர்களாக சக ஊழியராக மாறி அவருடன் பணியாற்றினர். உதாரணமாக சொன்னால் டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் பல கருத்துமோதல்கள் இருப்பினும் அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர் பின்னர் அம்பேத்கர் இந்தியாவின் சட்டத்தை வகுத்தார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.
('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.).
மணக்குடவர் உரை
தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.
மு.வரதராசனார் உரை
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
சாலமன் பாப்பையா உரை
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
No comments:
Post a Comment