Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
வகுத்தல் கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல்.

வகுத்தான் - படைத்தவன்; vakuttāṉ   n. id. Fate, as theGreat Dispenser; ஊழ். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377).

வகுத்த - வகுத்தல் கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அல்லால் - allāl   prep. அல்&sup4;. Except, besides; அல்லாமல் அஞ்சாமை யல்லால் (குறள், 497).  

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

தொகுத்தார்க்கும் - தொகுத்தல் - எண்கூட்டல்; திரட்டிக்கூட்டுதல்; அடுக்குதல்; மதிப்பிடுதல்; தொக்குநிற்கச்செய்தல்; சொல்லின்முதல்இடைஇறுதியில்எழுத்துகளைநீக்குதல்; சுருக்குதல்; சம்பாதித்தல்.

துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
நம்மை படைத்தவன் அதாவது இறைவன் நமக்கு ஒரு தலைவிதியை திட்டத்தை வகுத்து இருப்பான். அதுவே வெல்லும். அவ்வகுத்தலுக்கு மாறாக வேறு எதனையும் தளராத உழைப்பால் வென்று அதனை கோடி எண்ணிக்கையில் ஈன்றாலும் அதனை நாம் நுகருவதற்குக்கூட இறைவனின் தலைவிதி அமைந்திருக்க வேண்டும் இல்லையேல் மிக மிக கடினம். 

உதாரணமாக ஒருவர் அயராத உழைப்பால் எண்ணிக்கையில் அடங்காத சொத்துக்களை சேர்த்துவைத்து இருக்கலாம், ஆனால் அவர் அதை நுகரும் தருவாயில் அதனை நுகரமுடியாமல் போகும். நாம் விதியை வென்று இருக்கலாம். ஆனால் விதி நம்மைவிட வலியது. அது நம்முன்னே சென்றுவிடும். அவருக்கு உடல் உபாதையோ வந்தாலோ அல்ல உறுப்பு செயலற்றுப்போனாலோ அதனை நுகரமுடியாமல் போகக்கூடும். வணிக ரீதியாக பார்த்தால் ஒரு இயற்கை சீற்றம் வணிக பரிவர்த்தனைகளை மாற்றக்கூடும், அல்லது தீயினால் நடக்கும் விபத்து நமது சொத்துக்களை நிலைக்குலைய செய்யும் அல்லது ஒரு சுறாவளியோ மழையோ ஒரு விளையாட்டு போட்டியினை ரத்து செய்யகூடும். இப்படிப் பற்பல உதாரணங்களை கூறலாம்.

ஆதலால் நம்மை படைத்த இறைவன் நமக்கு விதித்து இருந்தால் மட்டுமே நம்மால் அதனை நுகரமுடியும் இல்லையேல் முடியாது. ஆதலால் இறைவனை என்று நாடு. 

அப்படியென்றால் நாம் விதியை வெல்ல உழைக்ககூடாதா? தளராது உழைக்கவேண்டும். படைத்த இறைவனைத் தவிர யாருக்கு தெரியும் நமக்கு விதிக்கபட்டதா இல்லையா என்று? நமக்கு ஒன்றை நுகர அல்லது அனுபவிக்க விதிக்கபட்டு இருக்கலாம். ஆனால் அது நமது இடத்திற்கு வராது. நாம் தான் தேங்கி நிற்காது அங்கு செல்ல வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும். அங்கு சென்றும் நுகரமுடியவில்லையென்றால் விதிக்கபடவில்லை என்று நினைத்துக்கொண்டு முன்னே செல்ல வேண்டும். பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்ய வேண்டும். 

இக்கருத்தையே நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவராற்றான்” (நாலடி 107)

சீவக சிந்தாமணிப்பாடலொன்று உழை மையமாகக்கொண்டு இக்குறள் கருத்தை பின்வருமாறு கூறுகிறது.
“அளந்துதாங்கொண்டு காத்த அருந்தவமுடைய நீரார்க்
களந்தன போகமெல்லாம் அவரவர்கற்றை நாளே 
அளந்தன வாழும் நாளும்”(சீவக.213)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

சாலமன் பாப்பையா உரை
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.


Thirukkural - Management - Fate
The influence of fate is that even if a person has earned crores of money and has other material belongings in his possession, he cannot enjoy that wealth or prosperity, if his fate is not  favorable to him to enjoy that wealth, confirms Kural 377.

Except as disposed by the Great Disposer
Even crores amassed may not be enjoyed

So, earning wealth or becoming prosperous is one thing and enjoying what one has earned is another thing. Both, to earn wealth and material things and to enjoy what one has earned, need the support of fate. 

No comments:

Post a Comment