குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
பொருள்
பொருள்
ஆர்தல் - நிறைதல்; பரவுதல் பொருந்துதல் தங்குதல் உண்ணுதல் துய்த்தல் ஒத்தல் அணிதல் பெறுதல்
ஆரா - எப்போதும் தீராத
இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை
அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை
நீ-த்தல் - nī- 11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).
நீப்பின் - நீப்பு - துறவு; பிரிவு
அந் - அந்த
நிலையே - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.
பேர் - pēr adj. [used as a prefix.] Great, large, excellent, principal, பெரிய. See பெருமை.
பேர் - pēr கிறது, ந்தது, பேரும், பேர, v. n. To become loose, to be detached, சிதைய. 2. To leave, depart, remove, to go away, நீங்க. For other meanings, see பெயர், v.
பேர்தல் - சிதைதல்; பிரிதல்; போதல்; அழிதல்; பிறழ்தல்; அசைதல்; குறைதல்; பின்வாங்குதல்; நிலைமாறுதல்; முறைபிறழ்தல்.
பேரா - பெரிய; நீங்காத; நிலைத்து நிற்கும்
இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை
தரும் - கொடுக்கும்
முழுப்பொருள்
ஆராத என்றால் என்றும் நிறைவடையாத என்றும் தீராத என்று பொருள். என்றும் தீராத என்றும் மனநிறைவடையாத தன்மையை இயல்பை வாய்ந்தது அவா (ஆசை, விருப்பு, விழைவு). மனநிறைவடையாத தன்மை துன்பத்தையே தரும். அத்தகைய அவாவை ஒருவர் நீப்பார் என்றால் அந்நிலையே எப்பொழுதும் நீங்காத தன்மை வாய்ந்த மெய்யான இன்பம் ஆகும். அதுவே வீடுபேறு ஆகும்.
திருவாய்மொழி இவ்வாறு கூறுகிறது
“நன்றாய் ஞானம் கடந்துபோய்
“நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு,
அதுவே வீடு வீடாமே. . (திருவாய் 78-6)”.வேட்கையின் ஆராமையைப்பற்றி மணிமேகலை (30:91) கூறூவது: “வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை”.
“சிறுகா லையிலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம்வே றுபடா
உறுகால் கிளர்பூ தமெல முகினும்
மறுகா நெறியெய் துவென்வா னுடையாய்” (கம்ப.சரபங்கர்.20)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
“அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”
No comments:
Post a Comment