Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

இடையறு-தல் - iṭai-y-aṟu-   v. intr. id. +.To be interrupted; to cease in the middle;தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள், 369).  

இடையறாது - தடைப்படாது

ஈண்டும் ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல்

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

துன்பத்துள்துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

கெடின் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
புலன்கள் ருசிப்பதும் அகங்காரம் நிறைவடைவன எல்லாம் இன்பம் அல்ல. இன்பம் என்பது மனமகிழ்ச்சி. அதுவே மெய்யான இன்பம். அத்தகைய இன்பம் இடைவிடாது ஒருவரை கூட அதுவாது இன்பம் நீங்காது/விலகாது நிலைத்து நிற்க இருக்க வேண்டும் என்றால் அவர் அவாவை முற்றிலும் அறுத்தொழிய வேண்டும். 
ஏன் அவாவை அறுத்தொழிய வேண்டும்?
ஏனேனில் அவாவென்பது விருப்பு, விழைவு, ஆசை. இவைத் துன்பங்களை இன்பம் போல் தருவது. ஒருவித மயக்கநிலையிலேயே நம்மை வைப்பது. துன்பங்களை இன்பம் போல் தருவதால் இது துன்பத்துள் எல்லாம் துன்பம். உதாரணமாக நெருப்பில் கை வைத்தால் நமக்கு சுடும் என்று தெரியும். அது துன்பம். அதுவே ஒருவர் தன் வாழ்வின் ஆசையாக குறிக்கோளாக தன் தேவைக்கு அதிகமான தன் ஊதியத்திற்கு கட்டுபடியாகாத ஒரு 3000 அடி வீட்டை கட்டியாக அல்லது வாங்கியாக வேண்டும் என்று நினைத்தால் அது அவருக்கு துன்பத்தையே தரும் ஏனேனில் அந்த வீடின் சொகுசுகள் அவருக்கு இன்பம் தரலாம். ஆனால் அதனை அடைய அவர் 20 ஆண்டுகளுக்கு மேல் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் அதனால் உடலும் மனமும் அயர்ச்சியடைந்து உறுப்புகள் நலன் அழியும். அல்லது அடையாமல் அவ்வாசையால் அலைக்கழிக்கப்பட்டு துன்பத்துள் உழலுவார். மனவருத்தம்  மன அழுத்த நோய்களை தரும். அதனால் தான் இன்பம் தருவதுபோன்ற இவ்வாசை துன்பமே. 

துன்பத்துள் துன்பம் என்பதை அறநெறிச்சாரப் 133 பாடலொன்றும் இவ்வாறு சொல்கிறது.
“துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் இன்பத்தியல்பறியாதவர்”. 

பரிமேலழகர் அவா அறுத்தார் வீட்டின்பம் (முத்தி) தம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பார்.

மனத்தடுமாற்றம் தான் அவாகவும் ஆசையாவும் தோன்றுகிறது. அதில் இருந்து ஒருவன் விடுபட்டுவிட்டால் மனம் ஸ்திடப்பட்டுவிடும். அதன் பிறகு மனதில் அசைவில்லை. அதன் பிறகு இறையருள் தானாக நிரம்புமும். பாரதியார் குருதரிசனம் பற்றி கீழிக்காணும் பாடலில் கூறியுள்ளார். ஒரு குருவிடம் பாரதியார் உபதேசம் கேட்பார். அதற்கு அந்த குரு மூன்று விஷயங்களைப் பார்ப்பார். 1) சூரியனைப் பார்ப்பார் 2) இடிந்த வீட்டையும் குட்டிச்சுவரையும் பார்ப்பார் 3) கீழே கிணற்றைப் பார்ப்பார். கிணற்றுக்குள்ளே தெரிகிற சூரியனைப் பார்ப்பார். அது (அச்சூரியன்) தெரிகிறாதன் என்பதுப்போல் குரு பாரதியாரிடம் கேட்ப்பார். பாரதி சொல்வார். இந்த உடம்பு அழிந்துவிடும். நிலையாமையை சொல்கிறது குட்டிச்சுவர். கிணறுக்குள்ளே சூரியன் எப்பொழுது தெரிவான் என்றால் நீர் அசைவில்லாது நிற்கும் பொழுது. அசைவில்லாது நீர் நிற்கும் பொழுது தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும். அப்பொழுது சூரியன் தெளிவாக தெரியும். 
அதையே தான் திருவள்ளுவர் முன்பு இக்குறளில் கூறியிருக்கிறார். அவா போய்விட்டால், மனம் அசைவில்லாமல் இருக்கும். அப்பொழுது திருவருள் தானாக நிரம்பிவிடும். இன்பம்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனேயொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, சென்றேன்
அறிதிகொலோ! எனக்கேட்டாம் அறிந்தேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்
தெரிவதுபோல் உனக்குள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான். 
--------------பாரதியார்


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
மணிமேகலையும் பௌத்தமும்
ஒரு விதத்தில் பௌத்த மதக் கொள்கையையும், குறிக்கோளையும் இரண்டே இரண்டு அடியுள் அடக்கிக் காட்டிய பெருமை மணிமேகலை என்னும் காப்பியத்தை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாருக்கு உண்டு. 

”துன்பம் தோற்றம்: பற்றே காரணம்:
இன்பம்; வீடே: பற்றிலி காரணம்”

என்பது அவர் வாக்கு. இதனையே மணிமேகலையில் பிறிதொரு இடத்தில்.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்:
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்:
பற்றின் வருவது முன்னது: பின்னது
அற்றோர் உறுவது” அறிகஎன்று அருளி,
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
உய்வகை இவைகொள்

என்கின்றன

இந்த நான்கு அடிகளுக்கும் முறையே துக்கம், துக்க நிவாரணம், துக்க உற்பத்திம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய வாய்மைகள் நான்கும் அடங்குகின்றன. பிறந்தோர் உறுவது பெருகிய துன்அம் என்பது துக்கம். பிறவார் உறுவது பெருகிய இன்பம் என்பது துக்க நீக்கம், துன்பம் பற்றால் வருவது என்பது துக்கத்தின் காரணம். இன்பம் பற்றறறோர் உறுவது என்பது துக்கத்தை நீக்கும் வழி. இந்த நான்குமே புத்தர் பெருமான் கண்ட பேருண்மைகள். துக்க உற்பத்தியை ஒன்றுக்கொன்று காரணமான பன்னிரண்டு இணைப்புகள் கொண்ட ஒரு சக்கரமாக உருகித்துக் காட்டுவது பௌத்த மத வழக்கம். வடமொழியில் இதனைப் பவ சக்கரம் என்பர். தமிழின் இதனை ஊழ் வட்டம் என்பர். மணிமேகலையில் ஏது நிகழ்ச்சி எனப் பேசப்படும் காரண காரிய பரம்பரையும் இதுவே. காரணகாரியமாகத் தொடரும் இத்துன்ப வட்டத்திலே ஏதாவது ஓர் இணைப்பை அறுத்துவிட்டாலும் வட்டம் அழிந்துவிடும். இவற்றை நினைவுகூருமுகமாக இன்றும் பௌத்த மதத்தினர் சிலர், ஏனைய சமயத்தோருள் சிலர் செபமாலையை உருட்டுவது போல, சக்கரத்தை உருட்டுவது வழக்கம். 

துன்ப நீக்கத்துக்குப் பௌத்தம் நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய எட்டு வழிகளை வகுத்துள்ளது. காமம், கொலை, சள் (சூது??), பொய், களவு ஆகிய ஐந்தையும் முற்றத் துறத்தல் ஆகிய ஐவகைச் சீலமும் இவற்றுள் அடங்கும். இதுவரை பௌத்தம் பேசும் நால்வகை வாய்மையையும் ஐவகைச் சீலத்தையும் குறிப்பிட்டோர். 

“அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

English Meaning - As I taught a kid - Rajesh
Real happiness will unendingly, without a break, touch a person if one kills the desires because desires are the roots of pain. 
Happiness that comes from satisfying our physical senses, satisfying materialistic quest, satisfying our desires, satisfying our ego is not real happiness. Actually speaking, we toil very hard for a small amount of unreal happiness coming from satisfying desires. Desires will keep us in a vicious cycle which is a pain. Once, we get rid of desires and identify what gives true happiness, we would have unending happiness

Questions that I ask to the kid
When does real happiness endlessly touch a person ? How that is possible?

No comments:

Post a Comment