அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால் துறவறவியல் புலான்மறுத்தல் குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று
குறள் 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]

பொருள்
அவி - வறைதின்பர்”வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள்.

சொரிந்து - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.

ஆயிரம் - ஓர்எண், āyiram   * n. sahasra. [K. sāvira,M. āyiram.] The number 1,000;  

வே-தல் - vē-   13 v. intr. [K. bē.] 1. Toburn; எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 2. To be hot,sultry, as the weather; to be scorched; வெப்பமாதல். வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது. 3. To be inflamed, as the stomach;அழலுதல். 4. To be boiled, cooked, as rice;கொதிக்கும் நீர் எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப்படுதல். சோறு வேகவில்லை. 5. To be refinedby burning in a crucible, as gold; புடம் வைக்கப்படுதல். வெந்தெரி பசும்பொன் (சீவக. 585). 6. Tobe distressed by grief or passion; துன்பமுறுதல்.துயரச்செய்தி கேட்ட என் மனம் வேகின்றது. 7.To be angry; சினமுறுதல். கட்டூர் நாப்பண் வெந்துவாய்மடித்து (புறநா. 295).

வேட்டலின் - வேள்விகள் வளர்த்தலின்

ஒன்றன் - ஒன்று - oṉṟu   n. [T. oṇḍu, K. ondu, M.onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண் (திவ். திருச்சந். 7.) 2. A person ofconsequence, a person worthy of regard; மதிப்புக்குரிய பொருள் ஒறுத்தாரை யொன்றாக வையாரே(குறள், 155). 3. Attaining salvation; வீடுபேறு (திவா.) 4. Union; ஒற்றுமை வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய்நின்ற வியற்சையை (பாரத. சூதுபோர்.7). 5. Truth; வாய்மை ஒன்றுரைத்து (கம்பரா.கிளை. 24). 6. Semen; இந்திரியம் இரண்டடக்கார்ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 7.Euphemism for urination; சிறுநீர் ஒன்றுக்குப்போய்வா. Colloq. 8. (Gram.) Singular numberof the impersonal class; அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 9. That which is imcomparable; ஒப்பற்றது. -- conj. Or; else; விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல் ஒன்று தீவினையைவீடு, ஒன்று அதன்பயனை நுகர் 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

செகுத்து - செகுத்தல் - வெல்லுதல்; கொல்லுதல்

உண்ணா - உள்நாக்கு; அண்ணத்துள்ளசிறுநாக்கு; அண்ணம், மேல்வாய்

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
இறைவனிடம் வேண்டி ஒரு வேள்வி/ யாகம் என்பது தீயின்கண் நெய் முதலிய அவிப் பொருட்களை உதிர்த்து (பொழிந்து, சொரிந்து) செய்யப்படுவது ஆகும். அப்படிச்செய்தால் அதனால் ஒரு பயன் உண்டாகும்/கிடைக்கும். ஆதலால் வேள்வி என்பது பயனை கொடுக்கும் ஒரு உயரிய செயல்/தவம் ஆகும்.

ஆயிரம் வேள்விகளை செய்தால் எவ்வளவு பயன் வருமோ அதைவிட அதிக பயனை தரக்கூடியது ஒரே ஒரு உயிர் கொன்று அப்புலாலை உண்ணாது இருத்தல் ஆகும். (அதாவது நீ தினமும் புலால் சாப்பிடுபவனாக கூட இரு, ஆனால் ஒருமுறை புலாலை உண்ணாது இருந்தாலும் உனக்கு ஆயிரம் வேள்விகளின் பயன் கிட்டும்). அப்படியெனில் ஒருபொழுதும் பிறர் உயிர்களை கொன்று உண்ணாது இருத்தல் எவ்வளவு பயனை தரும். மேலும் எவ்வளவு பாவத்தை பெற்றுத்தராது. இதனை சிந்தித்து உணர்ந்து புலாலை உண்ணாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

இதனால் வேள்விகள் செய்வது பயனற்றது என்பது இல்லை. வேள்விகள் பயன் தருவனவே. வேள்வியின் பயனை விட கொல்லாமையின் பயன் அதிகம் என்றே இக்குறள் சொல்லும் மைய கருத்து.

மேலும் வேள்வி என்பது ஒருவித படிமம். ஒருவர் ஒரு செயலில் ஒரு அறத்தில் மனதால் வேள்வி செய்யவேண்டும். வேள்வியில் ஒருவர் அருகே அமர்ந்தே செய்யவேண்டும். அதுபோல் அச்செயலில் முழுவதும் ஈடுபட்டே செய்யவேண்டும். இல்லையெனில் முழுப்பலனும் வராது. வேள்வியில் அவி உண்ணப்பட்டுக்கொண்டே இருக்கும். மாசுகள் தீயால் உண்ணப்படும். அது நமது மனதில் மாசுகள் நீங்குவதற்கு ஒப்பீடு. தீ என்பது அளவற்ற பசியை கொண்டது. அவியை உதிர்க்க உதிர்க்க உண்டுகொண்டே இருப்பது. ஆதலால் ஒரு செயலை வேள்வியென கருதிச் செய்தால் அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு செய்வோம். அதன் பயனை இறுதியில் வேள்விப்பயனாக செய்வோம். 

ஆனால் ஒரு சிலர் வேள்வி செய்வதை விட சாமிக்கு பால் அபிஷேகம் செய்வதை விட மற்ற உயிர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம் குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம் என்று குதர்க்கமாக கூறுவர். ஆனால் ஆராய்ந்துப் பார்த்தால் அபிஷேகமும் யாகமும் செய்வோர் பிறருக்கு உணவு கல்வி போன்றவற்றை கொடுத்து உதவுபவராகவே இருப்பார். ஆனால் கோயிலுக்கு கொடுக்காதே குழந்தைக்கு கொடு என்றென்பவர் பிறருக்கு ஒன்றும் கொடுத்து உதவி இருக்கமாட்டார். பலகோயில் நிர்வாகங்கள் இறைபக்தி உள்ளோரும் எத்தனையோ பேருக்கு பலவித உதவிகளை செய்துள்ளார்கள். ஆனால் கோயில்களையும் இறைபக்தி உள்ளோரையும் கிண்டல் செய்யும் சில நாத்திக "வாதர்கள்" (வாய் சொல் வீரர்கள்) பிறருக்கு ஒரு உதவியும் செய்து இருக்க மாட்டார்கள்.

தகவல்: நான்கு வகை யாகங்கள் உண்டு. அதில் மூன்று வித யாகங்களில் பிற உயிர்களை கொல்லுவது கிடையாது. ஒருவகை யாகத்தில் பிற உயிர்களை கொல்லுவது உண்டு. அதாவது பலி கொடுப்பது. அதிலும் ஒருவித நியாயம் உண்டு என்று சொல்லுவர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

மு.வரதராசனார் உரை
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை 
கொன்று தின்னாதிருப்பது வேள்வி செய்வதினும் பெரிது.


Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain