குறள் 258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
பொருள்
செயிரின் - செயிர்த்தல் - வெகுளுதல்; வருத்துதல்; குற்றஞ்செய்தல்
தலைப்பிரிந்த - தலைப்பிரிதல் - நீங்குதல்
காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.
காட்சியார் - அறிவினை உடையவர்
உண்ணார் - உண்ண மாட்டார்கள்
உயிரின் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
தலைப்பிரிந்த - தலைப்பிரிதல் - நீங்குதல்
ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு
முழுப்பொருள்
முந்தைய குறளில் புலாலை புண்ணுடன் ஒப்பிட்டார் திருவள்ளுவர். புலால் உண்ணுவதை உடம்பில் உள்ள புண்ணை உண்ணுவது போல் ஆகும். ஆதலால் அதனை உண்ணாதே என்றார். இந்த திருக்குறளில் ஒரு படி மேலே சென்று புலால் என்பது புண்ணிற்கு சமம். ஆதலால் அதை உண்ணாதே என்று கூறுகிறார்.
குற்றங்களில் இருந்து நீங்கிப் பிறருக்கும் பிறர் உயிர்களுக்கும் தீங்குச் செய்தலில் இருந்து நீங்கி நிற்கும் அற தரிசனத்தை பெற்றவர்கள் அருளை உடையவர்கள் ஒரு பொழுதும் புலாலை உண்ண மாட்டார்கள். ஏனெனில் உயிர் நீங்கிய உடம்பின் ஊன் என்பது பிணம். ஆதலால் பிற உயிர்களை கொன்ற பிறகு அவ்வூனும் பிணமே. ஆதலால் பிறர் உயிர்களின் பிணத்தை உண்ணாதே என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
புலாலை திண்றால் பிணத்தை திண்ணுவது போல் ஆகும். மேலும் புலாலை உண்ணுவோர் அற தரிசனம் பெறாத குற்றங்கள் நீங்காத அறிவற்றவர்கள் அருளற்றவர்கள் ஆவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.).
மணக்குடவர் உரை
குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
மு.வரதராசனார் உரை
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
No comments:
Post a Comment