உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால் துறவறவியல் புலான்மறுத்தல் குறள் 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்
குறள் 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]

பொருள்
உண்ணா - உள்நாக்கு; அண்ணத்துள்ளசிறுநாக்கு; அண்ணம், மேல்வாய்

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை

புலால்  - ஊன்முதலியன; புலால்நாற்றம்; தசைநரம்பு
அல் - இரவு; இருள் மாலை சூரியன் வெயில் மதில் சுக்கு மெய்யெழுத்து மயக்கம் எதிர்காலத்தன்மைஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; தொழிற்பெயர்விகுதி; ஒருசாரியை; ஆண்பால்பெயர்விகுதி; எதிர்மறைக்குறிப்புவினைப்பகுதி; எதிர்மறைஏவல்ஒருமைவிகுதி; எதிர்மறைவினைஇடைநிலை.

பிறிது - வேறானது

ஒன்றன் - அஃறிணையொருமைப்பால்

பிறிதொன்றன் - வேறொன்றின் 

புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. 

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
புலால் என்பது என்ன? பிறர் உயிர்களை கொன்று குவிக்கப்பட்ட ஒரு இறைச்சியே புலால். வெட்டி கொல்லப்பட்டதால் புலால் என்பது புண் ஆகும். நம் உடம்பின் மேல் வெட்டுப்பட்டோ அல்லது கீழே வீழ்ந்தோ ஒரு புண் இருந்தால் அதை உண்ணுவோமா? உண்ணமாட்டோம் அல்லவா. அதுப்போல புலாலை புண் என அறிவது மட்டும் அன்றி புலாலை புண் என உணர்ந்து அதனை உண்ணாது இருத்தல் வேண்டும். 

அறிதல் என்பது தகவல்களை தெரிந்துக்கொள்வது. உணர்தல் என்பது அறிந்து நினைத்து தெளிந்து அதன்படி நடந்துகொள்வது. அதனால் தான் திருவள்ளுவர் உணர்வார் பெறின் என்று (இக்குறளில் போல் பல திருக்குறள்களில்) அழுத்திச் சொல்கிறார். 

தனக்கு வந்தால் இரத்தம் பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா என்ற வசனமே இங்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஓரளவு நன்கு பொருத்தமாவவே உள்ளது. 

ஒப்புமை
அறநெறிச்சாரப் (96) பாடலொன்று புலாலை புண்ணுக்கொப்பாகச் சொல்கிறது. “தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் 
செம்புண் வறுத்த வறைதின்பர்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.

மு.வரதராசனார் உரை
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

சாலமன் பாப்பையா உரை
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை 
உயிர்வலி உணர்ந்தவன் மாமிசம் உண்ணமாட்டான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain