குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.
நயம் - nayam n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)
நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.
உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
நல்கூர்-தல் - nalkūr- 4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).
நல்கூர்ந்தான் - வறியோன்
ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
செயும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
நீர - nīra s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.
செய்யாது - செய்யாமல்
அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அமைகலா - உண்டாகாமல்
ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை
முழுப்பொருள்
ஒரு ஒப்புரவாளானுக்கு எது வறுமை? பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலைமையே ஒருவருக்கு வறுமை எனப்படுவது. பணம் இல்லை பொன் இல்லை என்ற நிலைகளை தாண்டி கொடுத்து உதவ வேண்டியவனுக்கு கொடுத்து உதவமுடியாத நிலையே வறுமை.
செல்வ நிலையில் வறுமையுற்றாலும் ஒப்புரவாளர் மனம் வருந்தமாட்டார். ஆனால் பிறருக்கு கொடுத்து உதவ முடியாத நிலையை எண்ணியே மனம் வருந்துவார். அந்நிலையில் தான் வறியவராய் உள்ளோம் என்று நோகுவார்.
கி.வா.ஜ உரையில் புறநானூற்றிலிருந்து மேற்கோளிட்டு சுட்டியிருப்பார் இவ்வாறு: “புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையான் உறவே” (புற 72:17-8)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.
மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
No comments:
Post a Comment