துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

குறள் 188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னியார் - அடுத்தோர்; நண்பர்; tuṉṉiyār   n. துன்னு¹-.Friends, relations, adherents; நண்பர். மன்னர்திருவு மகளி ரெழினலமுந் துன்னியார் துய்ப்பர்(நாலடி, 167).  

குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

தூற்றும் - தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

மரபினார் - மரபு - முறைமை; சான்றோரின்சொல்வழக்குமுறை; பழைமை; வமிசம்; பாரம்பரியம்; இயல்பு; இலக்கணம்; நல்லொழுக்கம்; பெருமை; பாடு; நியாயம்; வழிபாடு; பருவம்.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

என்னைகொல் – என்ன செய்வாரோ

ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்

மாட்டு - அகன்றுகிடப்பினும் அணுகியநிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும்முறை; அடி; சொல்.
māṭṭu   v. defect. used only in the future and negat.; (மாட்டுவேன் மாட்டுவாய் etc.), I can, I shall be able to do it.

மாட்டு - v. noun. A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring.

முழுப்பொருள்
தன்னுடன் பொருந்திச் செறிந்த நட்பினை உடைய நண்பரின் குற்றங்களைப் பற்றிப் பிழைகளைப் பற்றி அவர் இல்லாத பொழுது புறம் பேசி அவரை அவருடைய பிம்பத்தை சிதறடிக்கும் இயல்புடைவாரென்றால் அவர் அயலாரைப் பற்றி மற்றவரைப் பற்றி என்ன தான் பேசமாட்டார்கள் அல்லது அயலவருக்கு எத்தகைய தீங்கையும் செய்யத்தக்கவர்கள் தானே? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.

மு.வரதராசனார் உரை
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

சாலமன் பாப்பையா உரை
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நண்பர்களைப் பற்றியே புறம் பேசுவோரை நம்பாதே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain