குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை]
பொருள்
பொருள்
சொற் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை.
இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.
செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.
செப்புதல் - சொல்லுதல்; விடைசொல்லுதல்
ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.
ஒருதலையா - அதுவும், ஒரு பக்க சார்பின்மையை
உட் - உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை.
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
முழுப்பொருள்
நீதி என்றென்பது எந்த ஒரு விருப்பும் வெறுப்பும் இன்றி கூறப்படுதல் ஆகும். பிழை என்றால் பிழை. உதாரணமாக அம்மாவோ மனைவியோ அழுதாள் பிழை பிழை அல்ல என்று ஆகாது.
நடுவுநிலைமை தவறாத நீதி எப்போது வரும் தெரியுமா ? மனதளவில் ஒரு சார்பும் இல்லாத (வளையாத) சமனை பெறுவார் என்றால் அவருடைய நீதி சொற்களிலும் வளைவு இருக்காது. அதாவது நீதி சொற்கள் (தீர்ப்பு) உண்மையை உரைக்கும் விருப்பு வெறுப்பு இன்றி. நீதி பதி ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு மறுவார்த்தை இருக்க கூடாது. அது உண்மையாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அது மனதில் உண்மையாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் சொல்லுவது போல, வெளிவேடத்துக்கு நடுவு நிலையாளரைப்போல் தோற்றமும், ஆனால் அகத்தில், தனக்கு ஆதாயம் தரக்கூடிய சார்பு நிலையும் கொள்பவர்கள் ஏராளம்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.).
மணக்குடவர் உரை
நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின். இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சிந்தையில் நேர்மை இருந்தால் சொல்லில் நீதி நிலைக்கும்.
No comments:
Post a Comment