Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

குறள் 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
[பொருட்பால், குடியியல், குடிமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விளங்கும் - விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.)
விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.)

விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

விசும்பின் - விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

மதிக் - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மறு - குற்றம்; களங்கம்; தீமை; அடையாளம்; மச்சம்; பாலுண்ணி; மற்ற.

போல் -  ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

உயர்ந்து - உயர்ச்சி உயரம்; மிகுதியாதல்; விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
நற்குடியில் பிறந்தோர் அக்குடியின் புகழிற்கு களங்கம் விளைவிக்காத வண்ணம் நடந்துக்கொள்ளவேண்டும்.  ஏனெனில், நற்குடியில் பிறந்தோரின் குற்றங்கள் உயரே வானத்தில் உள்ள நிலாவில் தென்படும் களங்கம் போல எல்லோருக்கும் பெரிதாய் தெரிந்துவிடும். அதோ நிலவில் களங்கம் என்று எல்லோரும் ஒரு எடுத்துக்காட்டாக காண்பிப்பர். உதாரணத்திற்க்கு இக்குறளிலேயே நிலவில் உள்ள களங்கத்தை உதாரணமாக கூறுகிறோம் அல்லவா. மற்றவர்களை கூற ஒரு நேரமும் ஆகாது. 

ஆதலால் நற்குடியில் பிறந்தோர் இந்த உலகின் இயல்பு அறிந்து தன் குடியால் பெற்ற நன்மைகளுக்கு கைமாறாக பொறுப்போடு நடந்துக்கொண்டு குற்றங்கள் செய்யாது குடியின் பெருமையை காப்பாற்றவேண்டும்.

நற்குடிப்பிறப்பாளரின் குற்றங்களை மதியின் களங்கத்தோடு ஒப்பு நோக்கும் பல பாடல்கள் உள்ளன, இலக்கியங்களிலிருந்து.

“...பெரியோர்கண் தீமை
கருநரைமேல் சூடே போல் தோன்றும்” (நாலடி.186)

“நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
...... மாயா, நரையான் புறத்திட்ட சூடு” (பழமொழி 48)

”ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு” (பழமொழி 204)

திங்களைப்போற் சான்றோர் களங்கம் இருப்பினும் வாளா இரார் என்பதால், அவர் அதனினுஞ் சிறந்தவராவர் என்கிறது நாலடியார் பாடலொன்று.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின். (நாலடி 151)

பழமொழிப்பாடலொன்று (258) படித்த மாத்திரத்தில் விளங்குமாறு, 
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் 
மதிப்புறத்துப் பட்ட மறு” என்கிறது.

அறநெறி (161)
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் 
மதிப்புறத்தில் பட்ட மறு” என்கிறது.

மணிமேகலையும் கம்பராமாயாணமும் இதே ஒப்புமையையே கீழ்காணும் பாடல்களிலே கூறுவதைப் பார்க்கலாம்,

வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர 
                                      (மணிமேகலை 6:2-5 சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை)

வாலி இராமனைச் சாடுவதாக அமைந்த இப்பாடலும் இவ்வுவமையை அழகாகக் கூறுகிறது.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ 
                                    (கம்பராமாயணம் வாலிவதைப்படலம் 87)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

English Meaning - As I taught a kid - Rajesh
One who is born to a family with higher reputation has higher expectations because he/she is from a very well known family. Hence, if he makes a mistake, then his mistake will be visible and discussed by everyone because grey shades in the moon up above our head is seen by all and discussed by all. When one goes to high places one has the responsibility to be careful because his mistakes will be seen by all. 

Questions that I ask to the kid
How are mistakes of a person from a reputed family seen as? why? (because it is above our head in a height)

No comments:

Post a Comment