குறள் 936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
[பொருட்பால், நட்பியல், சூது]
பொருள்
அகடு - உள்; வயிறு நடு மேடு நடுவுநிலை பொல்லாங்கு
ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.
ஆரு - நிறைதல் - தணிதல்
ஆரார் - நிறையாத ; தணியாத
அல்லல் - துன்பம்
உழப்பர் - உழ-த்தல் - uḻa- 4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).
சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்
முகடியான் - முகடி - mukṭi s. The elder-sister of Lukshmi, மூதேவி; (lit.) poverty, or misfortune. (சது.)
மூடுதல் - போர்த்தல்; மறைத்தல்; சுற்றிக்கொள்ளுதல்; நோய்முதலியனமிகுதல்.
மூடப்பட்டார் - சுற்றிக்கொள்ளப்பட்டார் ; நோயால் மிகுதியாக பாதிக்க படுவார்
முழுப்பொருள்
“என் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்” என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு. அவ்வயிறு ஆராமல் இருப்பதே வறுமையில் உச்சக்கட்ட கொடுமை. வயிறு ஆராதிருக்கும்போது மற்ற புலன் நுகர்ச்சிகளும் இராது. ஆதலால் வயிறு ஆராமையை முதன்மை படுத்துகிறார் திருவள்ளுவர்.
சூது என்பது சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு கொடிய விளையாட்டு. எவ்வளவு நடுநிலை வாய்ந்தவரும் தோற்கக்கூடிய விளையாட்டு. தோற்றால் உச்சியில் இருந்து அதல பாதாளத்திற்கு செல்ல நேரிடும். அத்தகைய சூதை ஒருவர் விளையாடுவார் என்றால் அவர் எல்லா செல்வத்தையும் இழந்து பசி ஆராத அளவிற்கு உச்சகட்ட வறுமையில் சிக்கி தவிப்பார். மேலும் துன்பங்கள் பலவற்றில் உழன்று வருத்தப்படுவார். வறுமை(மூதேவி) என்னும் நோயால் பற்றிகொள்ளப்படுவார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.).
மணக்குடவர் உரை
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
மு.வரதராசனார் உரை
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
No comments:
Post a Comment