இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

thirukkural meaning விளக்கம் குறள் 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர் பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்
குறள் 906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

இமையாரின் - இமையார் - imaiyār   n. இமை- + ஆ neg.The gods, who never wink their eyes; தேவர் (குறள், 906.)  

வாழினும்  - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

இலரே - மக்கள் இல்லை 

இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

அமை - அமைதல் - amai-   4 v.intr. 1. To becomestill, quiet, to subside; அடங்குதல் (கல்லா. முரு.வரி, 15.) 2. To be satisfied, contented; திருப்தியாதல். அமைய வுண்மின். (W.) 3. To submit,acquiesce, agree; உடன்படுதல் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803). 4. (Gram.) Tobe regularized, as irregular expressions; வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு (தொல். பொ 196, உரை). 5. To besettled, fixed up; தீர்மானமாதல். அந்த வீடு எனக்கமைந்தது. 6. To crowd together, be close;  

ஆர் - ஆகாத

அமையார் - அமையாத - உடன்படாத ; ஏற்புடையாத 

தோள் - புயம்; கை; தொளை

அஞ்சுபவர் - பயப்படுபவர்

முழுப்பொருள் 
வெளி உலகில் தேவர் போன்று பீடுநடைப்போட்டு வாழ்ந்தாலும் எல்லா புகழையும் மரியாதையும் பெற்றாலும் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மனைவியிற்கு பயந்தால் அவருக்கு பெருமை/குணம்/அழகு இல்லை. 

கணவன் மனைவியிற்கு இடையே அன்பும் காதலும் தான் இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே பரஸ்பர நட்பும் மதிப்பும் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அச்சம் இருக்காது. அச்சமும் இருக்க கூடாது. 

மேலும் மனைவிக்கு அஞ்சி ஒருவன் தனக்கு ஒவ்வாதவற்றையும் அறம் அல்லாதவற்றையும் வெளியுலகில் செய்வான் சென்றால் அது அவனுக்கு இழுக்கே.

அழகிய தோளைக் குறித்ததற்கு என்ன காரணம் என்றால், வீரம் பொருந்திய வீரர்களையும் வென்றிருந்தாலும், மனைவியின் அழகியதோளுக்கு அஞ்சுவதை நையாண்டியாகக் குறிக்கத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர். இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain