Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

குறள் 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தேறினும் - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்

தேறாவிடினும் - தெளியாது இருந்தாலும்; துணியாது இருந்தாலும் ; தேர்ச்சியடையாது இருந்தாலும் 

அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக

அழிவின் - அழிவில் இருந்து

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தேறான் - தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான் 

பகுதல்- பிளவுபடுதல்; பாகமாய்ப்பிரித்தல்.

பகாஅன் - விலக மாட்டான் 

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
ஒருவன் அவன் மற்றவரிடம் கொண்ட பகையை பற்றி முழுவதமாக அறிந்திருந்தாலும் அல்லது அறியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தனக்கு நெருக்கடியோ அல்லது அழிவோ வரும் காலகட்டங்களில் தனக்கு ஒரு லாபம் வரும் அல்லது உதவி வேண்டும் என்று இருந்தாலும் கூட அப்பகையிடம் உறவை புதுப்பிக்க நட்பு பாராட்ட துணியக்கூடாது. அதேப்போல் அப்பகையிடம் மேலும் விலகாது இருந்தால் வேண்டும். அப்பகையை அப்படியே விட்டுவிட வேண்டும். 

ஏனெனில் அழிவில்  இருந்து அந்நேரத்தில் தப்பித்துவிடலாம் ஆனால் அப்பகையிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் ஒரு சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த அந்த பகை மெல்ல கொல்லும் தன்மை வாய்ந்தது. அதற்கு பகை உடன் கூடாமல் இப்பொழுதே அழிந்துவிடுவது மேல். 

அப்பகையிடம் மேலும் விலக்கம் கொண்டால் பகை நம்மிடம் சினந்து நாம் வலுவற்று இருக்கும் இந்நிலையில் நம்மை தாக்கி நம் அழிவை விரைவு படுத்தும். அதாவது "எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி" ஆகிவிடும்.  

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தௌ¤ந்தானாயினும் தௌ¤ந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தௌ¤ந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தௌ¤ந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.

மு.வ உரை
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

English Meaning - As I taught a kid - Rajesh
Whether 1) you know completely or partially about your enemy or 2) you dont know anything about your enemy, even at the time of death or grave danger do not ask for help from your enemy. Because you can even escape from the danger/death by some means but you can never know when your enemy will back stab you, betray you, attack you and destroy you.

Questions that I ask to the kid
Why should you not ask for help from your enemy even at the time of death?

No comments:

Post a Comment