குறள் 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]
பொருள்
மனத்தின் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு
அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல், சம்பவித்தல் (.To occur, happen), மாட்சிமையுடையதாதல்
அமையாத - உண்டாகாத ; சம்பவிக்காத
வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.
எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு
ஒன்றும் - சிறிதும், oṉṟum oNNum ஒண்ணும் (+ neg.) nothing
சொல்லினான் - சொல்(லு)-தல் - col- 5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல் சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை 3. [M. colluka.] To dictate, command; கட்டளையிடுதல் மூத்தோர் சொல்லியதைமீறாதே. 4. To advise; புத்திகூறல். 5. To inform; அறிவித்தல் யாருக்கென் சொல்லுகே னன்னைமீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 6. To praise;புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா.மாரீச. 73). ; col- v. tr. perh. kṣur. cf.சொலி¹-. To remove, alleviate, put away;களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம்புக்கோன் (புறநா. 39).
தேறல் - தெளிவு; தெளிந்தகள்; தேன்; சாறு.
பாற்று - உரியது.
அன்று -அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).
முழுப்பொருள்
தன்னுடைய மனதிற்கு உடன்படாத பொருந்தாத ஒருவர் நமக்கு நண்பர் ஆகா மாட்டார். ஆதலால் அத்தகையவர் கூறும் எத்தகைய சொற்களையும் தெளிந்த சொற்களாக நம்பிக்கைக்கு உரியதாக எடுத்துக்கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். ஆதலால் அவற்றை அப்படியே நம்பி எச்செயலையும் செய்யாதே. நீ ஆழுந்து எண்ணி ஆராய்ந்து செயல்படுக என்கிறார் திருவள்ளுவர்.
Earn Trust என்று வணிகம் நிர்வாகம் மேலாண்மை (MBA) படிப்புகளிலும் அலுவலக தலைமை பண்புகளிலும் பார்த்திருப்போம். அங்கே trust /நம்பிக்கை என்பது ஒருவர் செயல்புரிந்து ஈட்டும் தகுதி/குணம் ஆகும். பொதுவாழ்வில் நண்பர் என்பவர் நம்மிடம் அத்தகைய நம்பிக்கையை பெற்று இருப்பார். அதுவே மற்றவராக ஆகா இருந்தால் துவக்கத்தில் அந்நம்பிக்கையை பெற்று இருக்க மாட்டார். அவருடைய செயல்களை வைத்தே அவரை மதிப்பிட முடியும். அவர் செயல்களின் மூலம் நம்பிக்கையை பெற்று விட்டால் பின்பு அவர் பேச்சை கேட்கலாம்.
மேலும், நாம் ஒரு செயலை செய்தால் அதற்கு முழுப்பொறுப்பினையும் நாம் ஏற்கவேண்டும். பிறரை பொறுப்பாக்க கூடாது. அவர் சொன்னார் ஆதலால் செய்தேன். இதனால் இத்தீங்கு விளையும் என்று எனக்கு தெரியாது என்றெல்லாம் மழுப்பக்கூடாது. முழுப்பொறுப்பையும் நாம் தான் ஏற்கவேண்டும். முழுப்பொறுப்பையும் நாம் ஏற்பதால் எந்த ஒரு செயலையும் முழுமையாக ஆராய்ந்தப்பின் செய்க. அதுவும் நம்பிக்கைக்குரியவர் சொல்லவில்லையென்றால் கண்டிப்பாய் நன்கு ஆராய்ந்து செய்க.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தௌ¤தல் முறைமைத்தன்று, நீதிநூல். ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¤தல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.).
மணக்குடவர் உரை
மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தௌ¤தற்பாலதன்று. இது சொல்லினால் அறிதலரிதென்றது.
மு.வரதராசனார் உரை
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
No comments:
Post a Comment