பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

thirukkural meaning விளக்கம் குறள் 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் பொருட்பால், நட்பியல், பழைமை
குறள் 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

பெருங்கிழமை  - முழுஉரிமை; மிகுநேயம்

பெருங் - பெரும் - பெரிய 
கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

உணர்க - உணர்-தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

நோ - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஓ); வலி; துன்பம்; நோய்; சிதைவு; வலுவின்மை.

தக்க - - takka   தகுந்த, adj. part. see under தகு.

தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தால்

செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

முழுப்பொருள் 
நம் நண்பர் நமக்கு நாம் வருந்தும் வண்ணம் ஒரு செயலை செய்தாலோ அல்லது சொல்லை கூறினாலோ அதற்கு அவரது அறியாமை அல்லது மடமை அல்லது உய்த்துணரமால் செயல் புரிந்தது மட்டும் காரணமாக இருக்காது அதற்கு நம் நண்பர் நம் மேல் கொண்ட கொண்ட (அதீத) உரிமையும் காரணம் என்பதை உணர்க. ஆதலால் அவரிடம் உறவை துண்டிக்காதே. நடந்தவற்றில் நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை விலக்கிடுக. குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்பதை நினைவிலும் வைத்துக்கொள்க. 

உரிமை இல்லை என்று உணரும் நண்பன் உன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் அவன் காரியம் என்னவென்று பார்க்க சென்றுவிடுவான். அவனுடைய கோபம் கூட ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். நட்பின் ஆழத்தையும் குறிக்கிறது. 

இதையே நாலடியார் (223) பாடலொன்று 
“இறப்பவே தீய செயினும் தன் நட்டார் 
பொறுத்தல் தகுவதொன் றன்றோ 
ஒருவர் பொறை இருவர் நட்பு” சொல்வதும் இக்கருத்தையொட்டியே.


இருவர் நட்புறவில் இருக்கும்போது, யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றொருவர் பொறுக்க வேண்டும. இல்லையெனில் நட்பு நிலைக்காது. இப்பழமொழியைப் பழமொழி நானூறு பாடல் இவ்வாறு கூறுகிறது. தெளிவாகப் பொருள் கொள்ளும்படி பதம்பிரிக்கபட்டுள்ளது.

தீந்தீமை இல்லவர், நட்டவர் தீமையையும்,
‘எந்தீமை’ என்றே உணர்ப, தாம்; அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
....ஒருவர் பொறை, இருவர் நட்பு. (பழமொழி 247)

“பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லே” (குறுந்.230:3-4)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.

மு.வரதராசனார் உரை
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain