Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
குறிப்பின் - குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணரா - உணராத ; அறியாத ; நினைக்காத ; ஆராயாத ; தெளியாத 

ஆயின் - ஆனால்; ஆராயின்

உறுப்பினுள் - உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு

பயத்தவோ - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள் 
பிறர் (அல்லது அரசர்) உடலாலும் முகத்தாலும் வெளிப்படுத்தும் குறிப்புகளை ஒருவர் உணரவில்லையென்றால் பின்பு தான் உடலில் பெற்ற கண்களுக்கு என்ன பயன்? ஆதலால் கண்கள் என்பது பிறர் அறிந்தோ அல்லது அறியாமலோ உடல் மொழி (அல்லது முகத்தில்) கொண்டு காட்டும் குறிப்புகளை அறிந்து உணர்ந்து அதற்கு ஏற்றவாறு நடப்பதற்கே. 

இது சாதாரணமாக வீட்டில் கணவன் மனைவி பிள்ளைகள் தாய் தந்தையில் இருந்தே தொடங்கும். உதாரணமாக அலுவல் முடிந்து வீட்டிற்கு வரும் ஒருவர் சோர்வாகவோ அல்லது கோபமாகவோ வந்தால் அவர் உடல்மொழியை வைத்தே கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துக்கொள்ள வேண்டும். 

பழமொழி நானூற்றுப் (174) பாடலொன்று, “கணையிலும் கூரியவாம் கண்” என்கிறது!

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க. உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.

மு.வரதராசனார் உரை
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?.

Thirukkural - Management - Managing Emotions
Kural 705 questions that 'If a person's eyes are not sharp enough to read and understand the expressions on the faces of others what is the use of those eyes?' Though those eyes are alive physically, they are dead emotionally.

What uses are eyes that cannot read 
A man's thoughts on his face?

Be empathetic to people. Read their eyes to decipher the emotional disturbances they are undergoing.

No comments:

Post a Comment