குறள் 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
பொருள்
படி - கற்படி; ஏணிப்படி; நிலை; தன்மை; அங்கவடி; தராசின்படிக்கல்; நூறுபலங்கொண்டநிறையளவு; நாட்கட்டளை; நாழி; அன்றாடச்செலவுக்குக்கொடுக்கும்பொருள்; உபாயம்; உதவி; நிலைமை; விதம்; வாயில்நிலையின்கீழ்க்குறுக்குக்கட்டை; உடம்பு; மரபுவழி; தகுதி; முறைமை; வேதிகை; தாழ்வாரம்; நீர்நீலை; ஒத்தபிரதி; பகை; பூமி; உவமை; ஓர்உவமவுருபு.
உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.
உடையவர்கள் ; uṭaiyār n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.
அமைந்தக் - amai- 4 v.intr. 1. To becomestill, quiet, to subside; அடங்குதல் (கல்லா. முரு.வரி, 15.) 2. To be satisfied, contented; திருப்தியாதல். அமைய வுண்மின். (W.) 3. To submit,acquiesce, agree; உடன்படுதல் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803). 4. (Gram.) Tobe regularized, as irregular expressions; வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு (தொல். பொ 196, உரை). 5. To besettled, fixed up; தீர்மானமாதல். அந்த வீடு எனக்கமைந்தது. 6. To crowd together, be close;
amai- 4 v. intr. (நாநார்த்த.) 1.To occur, happen; சம்பவித்தல். 2. To be excellent, glorious; மாட்சிமையுடையதாதல்.
கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
உடையார் - உடையவர்கள் ; uṭaiyār n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).
மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
அரிது - அருமை; பசுமை; aritu அரியது, s. (அருமை) what is difficult, difficulty, rareness.
செயற்கரிது (செயல்+கு+அரிது), it is difficult to do.
முழுப்பொருள்
நிலத்தை ஆளும் மன்னர்கள் எல்லா செல்வத்தையும் உடையவர்கள். அத்தகைய கணக்கிடமுடியா பெரும் செல்வத்தையும் மற்றும் பல உதவிகளையும் (ஆதாவது அவர்கள் கீழ் வரும் அமைச்சர்ளும் அதிகாரிகளும் (/ வீட்டில் உள்ளோர்களும்) அவர்களுக்கு எல்லா உதவிகளை புரிந்தாலும், தகவல்களை கொடுத்தாலும், செயல்களை செய்தாலும்) ஒருவர் ஒருங்கே பெற்றாலும் அவர் சோம்பி திரிந்தால் அவர் மாட்சிமையையும் வினைப்பயனையும் அடைதல் மிக அரிய கடுமையான செயலாகும்.
இதையே ஔவையும் கொன்றை வேந்தனில், “ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு” என்று சொல்லுகிறார், மடிமை ஆக்கத்திற்கு கேடு என்று சொல்லாமல்!
மேலும்: அஷோக் உரை
செயல்கள் உடலால் மட்டும் ஆற்றப்படுவதில்லை. மூடிய பேழைக்குள் வைரம் ஒளிவிளையாடிக்கொண்டிருக்கிறது. உடற்குடத்திற்குள் இதயம் புரவியெனப் பாய்ந்து செல்கிறது. செயலை அஞ்சி செயலின்மையை விரும்பி ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தால் அனைத்தையும் இயற்றுபவனை பொய்யொழுக்கம் கொண்டவன் என்றே சொல்லவேண்டும். நிழல்கண்டு காமம் கொள்ளினும் உவகையும் துயரும் நிகரே.
பரிமேலழகர் உரை
படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.
மு.வரதராசனார் உரை
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
சாலமன் பாப்பையா உரை
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
No comments:
Post a Comment