பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பழி -  குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

கூறுவான் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

திறன் -  திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.

கூறப்படும் கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

முழுப்பொருள்
புறம் கூறுபவன் நன்மையை பேசமாட்டான். குற்றங்களையும் தீயவற்றையுமே  பேசுவான். சமூகத்தில் இருக்கும் நற்பெயரை கெடுக்க இல்லாதவற்றையெல்லாம் கற்பனையாக பொய்யாக கூட பேசுவான். 


நீ ஒருவன் முகத்திற்கு நேராக ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசினால் உன்னுடைய குற்றங்களை பிறர் பிறரிடம் கூறுவார்கள். ஏனெனில் உன்னுடைய புறம் கூறும் குணத்திற்காகவே உன்னுடைய குற்றங்களையும் புறத்தில் மட்டும் அல்ல நேரிலேயும் பேசுவர். 

நீ புறம் பேசுவதை அறிந்த அந்த சம்மந்தப்பட்ட நபரோ அல்லது நீ புறம் கூறுவதை கேட்டுக்கும் நபரோ உன்னை ஆராய்ச்சி செய்வர். உன் குற்றங்களில் எவற்றை கூறினால் உனக்கு அதிக இழுக்கும் வருத்தமும் வரும் என்று ஆராய்ந்து அதை தேர்ந்தெடுத்து உன்னைப்போல் புறத்தில் அல்லாமல் உன் முகத்திற்கு நேரே கூறுவர். அவன் ஒன்றை மட்டும் அல்ல பலகுற்றங்களை வரிசைப்படுத்தி கூறுவான். கூனி குறுகி நிற்க நேரிடும். நீ வீணாக இழுக்கு அடைவாய். அவன் திறனுடன் தேர்ந்து எடுத்து கூறும் குற்றங்கள் பொய்யாக இருக்காது. உண்மையாக இருக்கும். அதனை நீ மறுக்க முடியாமல் இழுக்கு அடைவாய். 

பிழை செய்யாதவர்கள் யாருமில்லை. பிறர் செய்ததுபோல நீயும் பிழை செய்திருப்பாய். ஆதலால் புறம் பேசாதே. அது உனக்கே வினையாக மாறும். 

பிறர் குற்றங்களை சொல்லும் பொழுது நமக்கு மகிழ்ச்சி. அப்படி கூறும்பொழுது ஒருதடவை நிறுத்திவிட்டு யோசியுங்கள். நான் உத்தமனா என்று? இல்லை என்றால் புறம் பேசாதீர். குறைந்தது புறம் பேசும் குற்றம் குறையும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்

மு.வரதராசனார் உரை
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

Thirukkural - Management - Avoiding Backbiting
Never ever talk of any negative qualities and negative actions of someone in his absence. Remember that other people also highlight the negative qualities and actions of a person who has the habit of talking of the negative qualities of others in their absence. It is said ’as within so without.' More than that talking against people in their absence is a tendency for some people. When a person points out the negatives of others, others will point out his own negative qualities, warns Kural 186.

A slandered invites a searching censure
Of his own faults.

Beware, 'If a person can talk to you against someone, he can talk to someone against you,' because it is a tendency for some people and they enjoy doing that. 

English Meaning - As I taught a kid - Rajesh
If one talks behind the back of others, backbites, gossips, then the person hearing it would first try to find the mistakes in the person talking and meticulously spread it across the world. Also, this world will see a backbiting person as a untrusty /unreliable, unskilled, characterless, strengthless, weak person. We loose more by backbiting. Hence, one should not backbite / gossip / talking behind others. 

Remember, everyone does mistakes in this world or everyone has flaws in this world. At least do not do the mistake of talking behind back.

Questions that I ask to the kid
What will others do when you backbite?
How will you be seen by others when you backbite?

No comments:

Post a Comment